ஊழல் எதிர்ப்புக்கான சீனாவின் முன்னேற்றம்

வாணி 2018-03-13 15:13:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மக்கள் குடியரசு மேற்பார்வை சட்ட வரைவு பரிசீலனைக்காக 13ஆம் நாள் செவ்வாய்கிழமை 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரில் ஒப்படைக்கப்பட்டது.  சீனாவின் சட்டத் துறையில் மேற்பார்வை வாரியங்களின் தகுநிலை, கடப்பாடு, மேற்பார்வை உரிமை மற்றும் ஒழுங்குமுறை, மேற்பார்வையிடப்பட்ட நபரின் சட்டப்பூர்வ உரிமையும் நலனும் முதலியவை பற்றி இந்தச் சட்ட வரைவில் விரிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. புதிய யுகத்தில் சீனாவின் ஊழல் எதிர்ப்புப் பணிக்கு இது சட்ட ரீதியான உத்தரவாதம் அளிக்கும் என நம்பப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் எதிர்ப்புத் துறையில் சீனா பெற்றுள்ள சாதனைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை பன்முகங்களிலும் வலுப்படுத்துவது, கட்சி மற்றும் நாட்டின் மேற்பார்வை அமைப்புமுறையை முழுமையாக்குவது முதலிய தேவைகளுக்கிணங்க, நடப்பு மேற்பார்வை அமைப்புமுறை மேம்பாடுத்தப்பட வேண்டியதானது.

2016ஆம் ஆண்டின் இறுதியில், பெய்ஜிங், ஷான்சி, ட்செச்சியாங் ஆகிய 3 பிரதேசங்களில் தேசிய மேற்பார்வை அமைப்புமுறையில் சீர்திருத்தம் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட துவங்கியது. தற்போது, இந்த சீர்திருத்தம் நாடளவிலும் பரவல் செய்யப்பட்டுள்ளது. நிர்வாகக் கண்காணிப்பு மற்றும் அரசு வழக்கறிஞர் வாரியங்களின் ஊழல் எதிர்ப்பு ஆற்றல் ஒருங்கிணைக்கப்பட்டு, மேற்பார்வை ஆணையம் உருவாக்கப்படும். ஒழுங்கு பரிசோதனைக்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு நிலை கமிட்டிகளுடன் இது இணைந்து செயல்படும். பொது மக்களுடன் நேரடித் தொடர்புடைய அனைத்து அரசுப் பணியாளர்களும் இந்த மேற்பார்வை அமைப்புமுறையின் கீழ் வருவர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாரியங்கள், தேசிய மக்கள் பேரவையின் வாரியங்கள், அரசு வாரியங்கள், மேற்பார்வை வாரியங்கள், நீதி மன்ற வாரியங்கள், அரசு வழக்கறிஞர் வாரியங்கள், மக்கள் அரசியில் கலந்தாய்வு மாநாட்டின் வாரியங்கள், பல்வேறு ஜனநாயகக் கட்சிகள் மற்றும் தொழில் மற்றும் வணிகச் சம்மேளனத்தின் வாரியங்கள் முதலிவற்றில் பணி புரியவர்கள், சட்ட ரீதியாக அல்லது அரசு வாரியங்களால் அதிகாரம் வழங்கப்பட்ட பொது நிர்வாக அமைப்புகளில் பொது துறை பணியில் ஈடுபவர்கள், அரசு சார் தொழில் நிறுவனங்களின் நிர்வாக பணியாளர்கள், கல்வி, அறிவியல், பண்பாடு, சுகாதாரம், விளையாட்டு முதலிய துறைகளில் நிர்வாக பணியில் ஈடுபடும் மக்கள், பொது மக்களின் தன்னாட்சி அமைப்புக்களில் நிர்வாகப் பணியில் ஈடுபடும் மக்கள் முதலியோர் இந்த மேற்பார்வை அமைப்புமுறையின் கீழ் வருவர்.

மேற்பார்வை வாரியங்கள், நீதி மன்ற வாரியங்கள், அரசு வழக்கறிஞர் வாரியங்கள், சட்ட அமலாக்க வாரியங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து செயல்படும். அதேவேளையில்,அவை ஒன்றினை மற்றொன்று கண்காணித்து கட்டுப்படுத்தும்.

பல்வேறு நிலை மேற்பார்வை வாரியங்கள் அதே நிலையிலான மக்கள் பேரவையிலானால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பேரவையின் கண்காணிப்பில் செயல்படும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்