தலைமை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் முடிவு

வான்மதி 2018-03-18 17:34:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தலைமை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் முடிவு

13ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரின் 6ஆவது முழு அமர்வு 18ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் பரிந்துரைக்கிணங்க, வாக்கெடுப்பு மூலம், லீகெச்சியாங்கைச் சீன அரசவையின் தலைமை அமைச்சராக நியமிப்பதென முடிவெடுக்கப்பட்டது. அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முதலாவது அரசாணையில் கையெழுத்திட்டு, லீகெச்சியாங்கை அரசவை தலைமை அமைச்சராக நியமித்தார்.

ஷிச்சின்பிங், லீகெச்சியாங், லி ட்சான்ஷு, வாங் யாங், வாங் ஹுநிங், ட்சாவ் லேஜி, ஹான் ட்செங், வாங் ச்சீஷான் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தலைமை அமைச்சர், மத்திய இராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர், உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான ஷிச்சின்பிங்கின் பரிந்துரை மனுக்கள் இக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டன.

தேசிய மேற்பார்வை கமிட்டித் தலைவர், உச்ச மக்கள் நீதிமன்றத் தலைவர், உச்ச மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றத் தலைவர், 13ஆவது தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டி உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு தலைமைக் குழு பரிந்துரை செய்த பிறகு, பெரும்பான்மை பிரதிநிதிகளின் கருத்துகளுக்கிணங்க அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் உறுதி செய்யப்பட்டது.

தேர்தல் மற்றும் நியமனத்தைத் தீர்மானிக்கும் முறையின்படி, வாக்குச் சீட்டுகளின் மூலம் லீகெச்சியாங் தலைமை அமைச்சராகவும், சு ச்சீலியாங், ட்சாங் யோவ்சியா ஆகியோர் மத்திய இராணுவ ஆணையத்தின் துணைத் தலைவராகவும், வெய் ஃபேங்ஹே, லீ ட்சுவோசேங், மியாவ் ஹுவா, ட்சாங் ஷேங்மின் ஆகியோர் மத்திய இராணுவ ஆணையத்தின் உறுப்பினர்களாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சீட்டுகளின் மூலம், யாங் சியாவ்டூ, சீனத் தேசிய மேற்பார்வை கமிட்டித் தலைவராகவும், சோ ச்சியாங், உச்ச மக்கள் நீதி மன்றத் தலைவராகவும், ட்சாங் ஜுன், உச்ச மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றத் தலைவராகவும், 159 வேட்பாளர்கள் 13ஆவது தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

முழு அமர்வுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் நிறைவுற்றப் பின், லீகெச்சியாங், யாங் சியாவ்டூ, சோ ச்சியாங், ட்சாங் ஜுன் உள்ளிட்ட தலைவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முறையே உறுதிமொழி எடுத்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்