நாணய மாற்று விகிதத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஆதாரம் எதுவும் இல்லை

2019-08-11 19:59:08
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன நாணயமான ரென்மின்பியின் மாற்று விகிதம், சீனப் பொருளாதார அடிப்படைகளுக்குப் பொருத்தமானது என்று சர்வதேச நாணய நிதியம் ஆகஸ்டு 9ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

பண மாற்று விகிதக் கட்டுப்பாட்டில் சீனா ஈடுபடுவது தொடர்பாக அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது, அமெரிக்காவின் பொய் கூற்று தான் என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை நிரூபித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு, அமெரிக்க வல்லுநர்கள் பலர் பேட்டி அளித்தபோது, சீனா, பண மாற்று விகித்த்தைக் கட்டுப்படுத்தவில்லை என்றும், சர்வதேச நாணய மற்றும் வர்த்தக அமைப்புமுறையில் அமெரிக்கா தனது வலிமைமிக்க தகுநிலையை தவறாக பயன்படுத்தி, சீனா மீது வர்த்தக மற்றும் நிதி நடவடிக்கை கொடுப்பதே பொறுப்பற்றதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்