உலக அளவில் ஒன்றோடு ஒன்று இணைவதை முன்னெடுக்கும் புதிய சக்தியாக விளங்குகிறது சீனச் சர்வதேச விமான நிலையம்

மதியழகன் 2019-09-25 19:01:55
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெய்ஜிங்கில் டாசிங் சர்வதேச விமான நிலையம் 25ஆம் நாள் புதின்கிழமை பயன்பாட்டிற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், இந்த புதிய விமான நிலையம் உலகின் முக்கிய போக்குவரத்து மையமாகத் திகழுகிறது. இது, சீனாவின் வளர்ச்சிக்கும் சேவை புரிந்து வருவதோடு, தரை மற்றும் கடல் வழி பட்டுப் பாதையில் ஒன்றுடன் ஒன்று இணையும் முன்னேற்றப் போக்கில் புதிய உந்து சக்தியாகவும் விளங்குகிறது.

டாசிங் சர்வதேச விமான நிலையம், ‘உலகின் புதிய ஏழு அதிசயங்களில்’ ஒன்றாக இருக்கிறது என்று பிரிட்டன் தி கார்டியன் நாளேடு கருதுவதோடு, 2019ஆம் ஆண்டு உலகில் மிக அற்புதமான கட்டிடமாக திகழ்கிறது என்றும் அமெரிக்காவின் சி.என்.என் நிறுவனம் கூறியுள்ளது.

புத்தாக்கம், பசுமை, எரியாற்றல் சிக்கனம் ஆகிய தனிச்சிறப்புகள், டாசிங் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளன. இருப்பினும், நுண்ணறிவு, வசதி போன்ற செயல்திறன்கள் மிக அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. மக்களே முதன்மை என்ற வடிவமைப்புச் சிந்தனையை எங்கும் உணரலாம். இந்த முயற்சிகளின் மூலம், பயணிகள், வசதியான மற்றும் அருமையான பயண அனுபவங்களைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

டாசிங் சர்வதேச விமான நிலையம் இயங்குவதுடன், இரண்டு சர்வதேச விமான நிலையங்களைக் கொண்டுள்ள மாநகராக, பெய்ஜிங் மாறியுள்ளது. இவ்விரு விமான நிலையங்களில் ஆண்டுக்கு 25 கோடி பயணிகள் வந்துச் செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய உந்து சக்தியை கொண்டு வரும்.

போக்குவரத்து, நகரங்களின் வளர்ச்சிக்கு முக்கிய இயங்கு ஆற்றல். பெய்ஜிங்கிலுள்ள டாசிங் சர்வதேச விமான நிலையம் பயன்பாட்டிற்கு வருவதால், சீனாவில் புதிய வளர்ச்சி ஆற்றலாக இருக்கும். பெரிய சக்தியை வெளிக்காட்டி, உலகளவில் ஒன்றுடன் ஒன்று இணைவதை முன்னெடுத்து செல்லும் போக்கில் புதிய பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்