நெடுநோக்குப் பார்வையில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க சீனா - இந்தியா முயற்சி!

2019-10-12 23:50:31
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மற்றும் இந்திய தலைவர்களிடையே 2ஆவது முறை சாரா சந்திப்பு அக்டோபர் 11, 12 ஆகிய நாட்களில் சென்னைக்கு அருகில் நடைபெற்றது. அப்போது, நெடுநோக்கு மற்றும் நீண்டகாலப் பார்வையில் சீன-இந்திய உறவின் வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு வலுவான உந்து சக்தியை ஊட்ட வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

சீன-இந்திய தலைவர்களிடையே முறை சாரா சந்திப்பு என முறையின் உருவாக்கமானது, இரு நாட்டு வெளியுறவுத் துறையில் முக்கிய செயல்பாடாக திகழ்கிறது. கடந்த ஆண்டின் ஏப்ரல் திங்கள், ஷிச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி சீனாவின் வூகான் நகருக்கு வந்து, இரு தரப்பினர் முதலாவது முறைசாரா சந்திப்பு நடத்தினர். அந்த முக்கிய சந்திப்பின் பிறகு, இரு தரப்புகளுக்கு இடையேயான கருத்துவேற்றுமை உரிய முறையில் கட்டுப்பாட்டிற்கு வந்தது. இரு நாட்டுறவு சீராக வளர்ந்து புதிய காலக் கட்டத்தில் காலடி எடுத்துள்ளது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகள் விரிவாக முன்னேறி வருகின்றன.


வூகான் சந்திப்பில் காணப்பட்ட நல்ல சூழ்நிலை, தற்போது நடைபெற்ற இந்தச் சந்திப்பிலும் தொடர்ச்சியாக காணப்பட்டது. சீனத் தலைவருக்கு இந்தியா உற்சாகமான வரவேற்பு அளித்தது. நரேந்திர மோடியுடன் இணைந்து ஷிச்சின்பிங், ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு உடைய தொன்மையான கோயிலைப் பார்வையிட்டார். இதனிடையில், நீண்டகால வரலாற்றுக் கலாச்சாரங்களில் இருந்து ஞானம் பெற்று, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியை நனவாக்கும் விருப்பம் இரு நாடுகளுக்கும் உண்டு.

மக்கள் தொகை, பொருளாதார அளவு, வரலாற்றுக் கலாச்சாரம் உள்ளிட்ட கோணங்களில் இருந்து பார்வையிடும்போது, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது. முன்பு, சீனாவும் இந்தியாவும் கூட்டாக முன்மொழிந்த பஞ்ச சீலக் கொள்கை, சர்வதேச உறவின் அடிப்படை விதியாக மாறியுள்ளது.

தற்போது, இரு நாடுகளும், தேசத்தின் மறுமலர்ச்சி அடைவதற்கான முக்கிய கட்டத்தில் நிற்கின்றன. இந்த சந்திப்பில், பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம், பண்பாட்டுப் பரிமாற்றம், சர்வதேச மற்றும் பிரதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட அதிகமான அம்சங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இதுவே, இரு தரப்புகளுக்குரிய நட்புறவை ஆழமாக்கி, நெடுநோக்குப் பார்வையில் இரு தரப்புறவின் அடுத்த கட்டத்திலான வளர்ச்சித் திசையை வகுப்பதாக அமையும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வாளர்கள் கூறியபோது, சீனாவும் இந்தியாவும் இணைந்து எழுச்சி அடைவது, 21ஆம் நூற்றாண்டில் மனித வரலாற்றில் மிக முக்கிய விடயங்களில் ஒன்றாகும் என்று சுட்டிக்காட்டினர். அண்டை நாடுகளான சீனா, இந்தியா, நெடுநோக்கு பார்வையில் இரு தரப்புறவைக் கையாண்டு, கருத்து வேற்றுமையை களைந்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவதற்கு அதிகபட்சமான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். டிராகனும் யானையும் இணைந்து நடனமாடுவதே, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு நன்மைகளை கொண்டு வருவதோடு, பிரதேச மற்றும் உலகின் அமைதிக்கும் வலுவான ஆதரவு அளிக்கும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்