தொடர்ந்து சீராக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரம்

2019-06-10 19:14:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

10ஆம் நாளான இன்று வெளியான புதிய புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டு முதல் 5 திங்களில் சீனாவின் வெளி வர்த்தகத் தொகை, கடந்த ஆண்டில் இருந்ததை விட 4.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், சீனாவின் துவன்வூ விழாக் கொண்டாட்டத்தின் விடுமுறை நாட்களில், சுற்றுலா வருமானம், 8.6 விழுக்காடு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக வர்த்தகச் சர்ச்சை தீவிரமாகி வரும் நிலையிலும், சர்வதேச வர்த்தகம் மந்தமாகியுள்ள சூழலிலும், சீனாவின் வெளிவர்த்தகம் தொடர்ந்து சீராக வளர்ந்து, சீனாவின் விடுமுறை நுகர்வும் தொடர்ந்து ஏற்றமடைந்து வருகிறது. சீனப் பொருளாதாரத்தின் வலிமை, உள்ளார்ந்த வாய்ப்பு மற்றும் உந்து சக்தி அதிகம் என்பதை இது நிரூபித்துள்ளது. கடலைப் போன்ற சீனப் பொருளாதாரம், கொந்தளிப்பான அலையைத் தாங்கி கொள்ள முடியும் என்று நம்புகின்றோம்.

வேகம் மற்றும் மொத்த தொகை என்ற சொற்கள், சீனப் பொருளாதார வளர்ச்சியின் சின்னம் அல்ல. உயர் தரமான வளர்ச்சி, சீனப் பொருளாதார வளர்ச்சியின் சிறப்பு அம்சமாக மாறி வருகிறது. தற்போது, சீனப் பொருளாதார வளர்ச்சியில் உள்நாட்டுச் சந்தைத் தேவையின் பங்களிப்பு விகிதம், 100 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. இதுவே, பொருளாதார வளர்ச்சி சார்ந்திருக்கும் காரணியாகும். வெளிநாடுகளுடனான வர்த்தகத்தை சீனா சார்ந்திருக்கும் அளவு, 33 விழுக்காடாக குறைந்துள்ளது. சீனப் பொருளாதாரக் கட்டமைப்பு மேம்பட்டு வருகிறது.

2018ஆம் ஆண்டு சீனா முழுவதிலும், ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.18 விழுக்காடு இடம்பிடித்தது. பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்த வரை, அறிவியல் தொழில் நுட்பங்களின் பங்களிப்பு, 58.5விழுக்காடாக உயர்ந்துள்ளது. உலகின் புத்தாக்கக் குறியீட்டுத் தரவரிசையின் முதல் 20 இடங்களில் சீனா முதல்முறையாக நுழைந்தது. சீனப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் இத்தகைய மாற்றம் மற்றும் புத்தாக்கம், சீனப் பொருளாதாரம், வெளியுலகத்தில் இருந்து வீசும் காற்று மற்றும் அலையைத் தடுக்கும் புதிய உந்து சக்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

திறப்பு, சீனப் பொருளாதாரத்தின் வலிமைமிக்க ஆதாரமாக மாறியுள்ளது. இது, பன்னாட்டு மூலதனத்திற்கு ஒரு பாதுகாப்பு துறைமுகம் போன்ற இடம் அளிக்கிறது. இதனிடையில், குவல்காம் உள்ளிட்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், தொடர்ந்து சீனப் பொருளாதாரத்தின் உயர்தரமான வளர்ச்சிப் போக்கில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்