சீனாவின் தாராள வர்த்தக மண்டலங்களின் வளர்ச்சி

கலைமணி 2019-08-27 16:20:56
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷென் துங், ஜியாங் சூ, குவாங் சீ, ஹே பெய், யுன் நான், ஹெய் லுங் ஜியாங் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களை அடங்கிய புதிய தாராள வர்த்தக மண்டலங்கள் பற்றிய பெயர் பட்டியலை சீன அரசு 26ஆம் நாள் திங்கள்கிழமை வெளியிட்டது. அதனையடுத்து, சீனாவிலுள்ள தாராள வர்த்தக மண்டலங்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. சீனா உண்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சீர்திருத்தத்தையும் வெளிநாட்டுத் திறப்புப் பணியையும் உறுதியாக முன்னேற்றி, பொருளாதாரத்தின் தரமான வளர்ச்சிக்கு வழிகாட்டி, பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்துக்கு புதிய ஆற்றலை ஊட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது சீனாவின் வெளிநாட்டுத் திறப்புப் பணி, வணிகப் பொருள் மற்றும் மூலவளங்கள் துறையின் சீர்த்திருத்தத்திலிருந்து, உயர் நிலையான அமைப்பு முறை சீர்த்திருத்தத்திற்கு மாறியுள்ளது. ஷென் சென் முன்மாதிரி தாராள வர்த்தக மண்டலம் மற்றும் ஷாங்ஹாய் தாராள வர்த்தக மண்டலத்தின் புதிய பகுதியையும் 6 புதிய தாராள வர்த்க மண்லடங்களையும் உருவாக்குவது, இம்மாற்றத்திற்கு முக்கிய மேடையை வினியோகிக்கும்.

கடந்த ஓராண்டு காலத்தில், அமெரிக்கா சீனாவுடன் தீவிரமாக வர்த்தக சர்ச்சையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், சீனாவோ சொந்த திட்டத்தின் படி, வெளிநாட்டுத் திறப்புப் பணியை விரிவாக்கி, பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தை முன்னேற்றி, திறப்புத்தன்மை வாய்ந்த உலக பொருளாதாரத்தைக் கட்டியமைக்கும் முக்கிய ஆற்றலாக மாறியுள்ளது.

சீனாவின் வெளிநாட்டுத் திறப்புப் பணி, சீனாவுக்கும் உலகிற்கும் நலன் தந்துள்ளது. இவ்வாண்டின் முதல் 6 திங்கள் காலத்தில், சீனாவின் உள் நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு விகிதம் 6.3 விழுக்காடாகும். இதனால், உலகின் முக்கிய பொருளாதார நாடுகளில் சீனா முன்வரிசையில் உள்ளது.

அதேவேளை, சீனா மேற்கொண்டு வருகின்ற சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி உலகின் வளர்ச்சிக்கும் வாய்ப்பு தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்