வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஹாங்காங் பிரச்சினையை சாதகமாக பயன்படுத்தும் அமெரிக்கா வெற்றி பெறாது

மதியழகன் 2019-08-31 16:32:01
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை, ஹாங்காங் பிரச்சினையுடன் தொடர்பு உடையது என்று அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் ஆகஸ்ட் 30ஆம் நாள் கருத்து தெரிவித்தனர். ஆனால், ஏறத்தாழ ஒரு திங்களுக்கு முன்னதாக, இவர்கள் வெளிப்படையாக கூறுகையில், ஹாங்காங், சீனாவின் ஒரு பகுதியாகும். ஹாங்காங் பிரச்சினையைத் தானாகவே தீர்க்கும் சீனாவுக்கு ஆலோசனை தேவையில்லை என்றும் தெளிவுபடுத்தினர்.

இரு தரப்புப் பணிக் குழுக்கள், சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தினால், அமெரிக்க தரப்பின் சிலர் சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடப் போவதில்லை என்று தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் தீவிரம் காணப்படும் போது, இவர்கள், ஹாங்காங் பிரச்சினை, வர்த்தகப் பேச்சுவார்த்தையுடன் தொடர்பு உடையது என்று கருத்து தெரிவித்தனர்.

இவ்வாறு மாறி வரும் அமெரிக்காவின் நிலைப்பாடு எங்களுக்கு உண்மையைக் காட்டுகிறது. அதாவது, ஹாங்காங் பிரச்சினையை வர்த்தகப் பேச்சுவார்த்தையில் சாதகமாக பயன்படுத்தி, சீனாவுக்கு அழுத்தம் கொடுத்து, பேச்சுவார்த்தையில் இருந்து கூடுதலான நலன்களை பெறுவதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது.

சீன-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையில், பிற பிரச்சினைகளை கலக்கக் கூடாது என்பது சீனாவின் நிலைப்பாடு. வர்த்தகம் மற்றும் அரசியல் ஆகியவற்றை தனியாக பார்ப்பது, இரு தரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தையின் சரியான வழிமுறையாகும். ஹாங்காங் பிரச்சினையை வர்த்தகப் பேச்சுவார்த்தையில் சாதகமாக பயன்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி வெற்றி பெறாது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்