ஹாங்காங்கில் கலவரத்தை ஏற்படுத்தும் சதி தோல்வி!

மதியழகன் 2019-09-06 19:26:55
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறைச் செயல்பாடுகளில், “வண்ணப் புரட்சி” போன்ற தெளிவான அறிகுறி காணப்பட்டது. இதன் பின்னணியில், அமெரிக்க ஜனநாயக நிதியத்தின் அரசியல் தலையீடு இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

1983ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமெரிக்க ஜனநாயக நிதியம், அரசு சாரா அமைப்பாக செயல்படும் என வெளிப்படையாக அறிமுகம் செய்தது. உண்மையில், பிற நாடுகளுக்கு ஜனநாயக ஆதரவு அளிப்பது என்ற பெயரில், பிற நாடுகளின் ஆட்சியைக் கவிழ்த்துவது போன்ற வண்ணப் புரட்சியில் ஈடுபடுவது வழக்கம்.

ஹாங்காங்கில் வண்ணப் புரட்சியை ஏற்படுத்தி, சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசை முடக்கி, அரசில் இருந்து ஆட்சியை கைப்பற்றி, ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற கொள்கையை ஒழித்து, வண்ணப் புரட்சியை சீன பெருநிலப் பகுதிக்கு உட்படுத்த, அமெரிக்க ஜனநாயக நிதியம் முயன்று வருகிறது.

இத்தகைய தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை சீனா அனுமதிக்காது. ஹாங்காங், சீனாவைச் சேர்ந்ததே. அமெரிக்க ஜனநாயக நிதியம் உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகள், சீனாவின் இறமையான்மை மற்றும் பாதுகாப்பு, ஹாங்காங்கின் நிலைப்புத்தன்மை ஆகியவற்றைப் பேணிக்காப்பதில் சீன மத்திய அரசு மற்றும் மக்களின் மனவுறுதியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்