சீனாவின் வலிமைமிக்க பொருளாதார வளர்ச்சி

கலைமணி 2019-09-09 18:41:33
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனச் சுங்கத் துறை தலைமை பணியகம் அண்மையில் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 8 திங்களில், சீனச் சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 20 இலட்சத்து 13 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. இத்தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.6 விழுக்காடு அதிகம். மிகச் சிக்கலான தற்போதைய நிலைமையில் சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் துறை, இவ்வளவு பெரிய சாதனைகளைப் பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு தரப்புவாதம் மற்றும் பாதுகாப்புவாதத்தின் பாதிப்பினால், இவ்வாண்டு உலக வர்த்தக அதிகரிப்பு விகிதத்தின் மீதான மதிப்பீடு, 3.7 விழுக்காட்டிலிருந்து, 2.6 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளதாக உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், இவ்வாண்டு முதல் 8 திங்களில் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி நிதானமாக வளர்ந்து வந்துள்ளது.

இதற்கு 3 முக்கியமான காரணங்கள் உள்ளன.

ஒன்று, சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டமைப்பு உயர் நிலைக்கு தொடர்ந்து உயர்ந்துள்ளது.

இரண்டாவதாக, சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சந்தை நாளுக்கு நாள் பலதரப்புமயமாகியுள்ளது. இடர்பாட்டை எதிர்க்கும் தொழில் நிறுவனங்களின் ஆற்றல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

மூன்றாவதாக, தனியார் தொழில் நிறுவனங்கள் சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறையில் ஆற்றிய பங்கு தொடர்ந்து அதிகரித்துள்ளதே இதற்கான காரணங்களாகும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்