நல்லெண்ண நடவடிக்கைகளுடன் பேச்சுவார்த்தைக்கான சாதகமான சூழலை உருவாக்க வேண்டும்: சீனா

மதியழகன் 2019-09-12 13:56:59
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அக்டோபர் முதல் தேதியிலிருந்து, 25ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரி விதிக்கும் முடிவை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் நேற்று 11ஆம் நாள் தெரிவித்தார். முன்னதாக, அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரி விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் முதல் தொகுதிப் பட்டியலை சீனா வெளியிட்டது.

சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகக் குழுத் தலைவர்கள் கடந்த 5ஆம் நாள் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டபோது, அக்டோபர் திங்கள் வாஷிங்டனில் 13ஆவது சீன-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர். நடப்புப் பேச்சுவார்த்தைக்கு முன்பு, இரு தரப்பும் நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்டு, பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைவதற்கான சாதகமான சூழலை உருவாக்க பாடுபட்டு வருகின்றன. பன்னாட்டுச் சமூகத்தின் எதிர்பார்ப்புக்குப் பொருந்திய இத்தகைய முயற்சி, பாராட்டத்தக்கது.

உலகின் மிகப் பெரியப் பொருளாதாரங்களைக் கொண்டுள்ள சீனா, அமெரிக்கா ஆகியவற்றின் நலன்களும் ஆழமாக ஒன்றிணைந்துள்ளது. இரு தரப்பு ஒத்துழைப்பு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இதற்காக, இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் கருத்துவேற்றுமைகளைக் களைந்து, ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு காண வேண்டும்.

வர்த்தகப் போர் தீவிரமாகி வருவதை சீனா உறுதியுடன் எதிர்க்கிறது. இதைச் சமாளிக்க, இரு தரப்பும் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தி, பொதுக் கருத்துக்களை அதிகரித்து, கூட்டு வெற்றி பெறும் நிலையில் இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொருளாதார வர்த்தக உடன்படிக்கையை எட்ட சீனா வரும்புகிறது. இத்தகைய விளைவு, சீனா, அமெரிக்கா, மற்றும் உலக நாடுகளுக்கு நன்மை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்