நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கைகள்

கலைமணி 2019-09-13 18:48:00
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தொடர்புடைய தொழில் நிறுவனங்கள், சந்தைமயமாக்க கோட்பாட்டையும் உலக வர்த்தக அமைப்பின் வரையறையையும் பின்பற்றி, அமெரிக்காவிலிருந்து சோயா அவரை, பன்றி இறைச்சி ஆகிய வேளாண் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சீன அரசு ஆதரவு அளித்து வருகின்றது. இந்த இறக்குமதிப் பொருட்களுக்கு, கூடுதல் சுங்க வரி வசூலிப்பு பெயர்ப் பட்டியலிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை சீனாவின் நல்லெண்ணத்தை வெளியிட்டு, பிரச்சினையைத் தீர்க்கும் விருப்பத்தை தெரிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களில், கூடுதல் சுங்க வரி வசூலிப்புக்குரிய அமெரிக்கப் பொருட்களின் பெயர் பட்டியலில் விலக்கு அளிக்கப்படும் முதல் தொகுதி பொருட்களின் பெயர்பட்டியல் வெளியிடப்பட்டது. அதனையடுத்து அக்டோபர் முதல் நாள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மீது வசூலிக்க விருந்த கூடுதல் சுங்க வரியை அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது. இந்த நடவடிக்கைகள், இரு நாடுகளும், கூட்டாக கவனம் செலுத்துகின்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரே திசையை நோக்கி பாடுபடும் விருப்பத்தை வெளிக்காட்டியுள்ளது. நடைபெறவுள்ள 13ஆவது சுற்று சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உயர் நிலை கலந்தாய்வுக்கு சீரான நிபந்தனையை இவை உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்