உலக காலநிலையை சமாளிப்பதில் தொடர்ந்து ஆக்கப்பூர்வ சக்தியாக விளங்குகிறது சீனா

மதியழகன் 2019-09-24 19:11:02
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா.வின் காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு 23ஆம் நாள் திங்கள்கிழமை நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது. அப்போது, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உரை நிகழ்த்துகையில்,‘காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. ஒப்பந்தம்’, மற்றும்‘பாரிஸ் உடன்படிக்கை’ஆகியவை தொடர்பான கடமைகளை சீனா நிறைவேற்றி வருகிறது. சீனா, சர்வதேச கூட்டங்களில் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான மனவுறுதியை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளதோடு, இது ஒரு பெரிய நாட்டின் மனவுறுதி மற்றும் பொறுப்பு தான் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளது.

நிலையான வளர்ச்சிக்குத் தேவைவான உள்ளடக்கம், பொது எதிர்காலம் உடைய சமூகத்தை உருவாக்குவதில் ஏற்க வேண்டிய பொறுப்பு ஆகியற்றைக் கருத்தில் கொண்டு, சீனா எப்போதும் காலநிலை மாற்றத்தைச் சமாளித்து வருகிறது. இது வரை, ஆற்றல்ச் சிக்கனம், புதிய ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாடு ஆகிய துறைகளில் சீனா உலகில் முதலிடம் வகிக்கிறது. உயிரினச் சூழல் கட்டுமானம் சீனத் தேசிய வளர்ச்சி நெடுநோக்கு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகளவில் புதிதாக தோன்றியுள்ள பசுமை நிலங்களின் நான்கில் ஒரு பகுதி, சீனாவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செயல்கள் பழங்கள் ஆகும் ஆனால் சொற்கள் இலைகள் தான் என்ற பழ மொழி மேலை நாடுகளில் உண்டு. அதைப் போல, உலக காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் முக்கிய காலக்கட்டத்திலேயே, ஒவ்வொரு நாடும் மனவுறுதியுடன் செயல்பட்டு, ‘பாரிஸ் உடன்படிக்கை’ யை நடைமுறைக்கு முன்னெடுத்து, சமாளிப்பு நடவடிக்கைக்கு புதிய உந்து சக்தியை ஊட்ட வேண்டும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்