சீனாவின் உள்விவகராரங்களில் தலையிடும் அமெரிக்காவின் செயல், தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கும்

மதியழகன் 2019-09-26 19:38:27
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டு ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநயாக மசோதா, நாடாளுமன்ற உறுப்பினர் சிலரால் முன்வைக்கப்பட்டு, 25ஆம் நாள் புதன்கிழமை அமெரிக்காவின் செனெட் அவை மற்றும் பிரதிநிதிகள் அவையின் வெளியுறவு விவகாரக் குழுக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மனித உரிமை மற்றும் ஜனநாயகம் என்ற பெயரில் சாக்குப் போக்கு சொல்லும் அமெரிக்கா, வெளிப்படையாக ஹாங்காங்கின் தீவிரவாத சக்திகள் மற்றும் வன்முறையாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது. அமெரிக்காவின் இச்செயல், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவின் அடிப்படைவிதிகளை கடுமையாக மீறியதாகவும், சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகவும் உள்ளது. ஹாங்காங்கில் கலவரத்தை ஏற்படுத்தி, சீன வளர்ச்சியைப் பாதிப்படைய செய்ய வேண்டும் என்ற கெட்டநோக்குடன் அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் செயல்படுகின்றனர்.

சீன-அமெரிக்க தூதரக உறவு உருவாக்கப்பட்ட 40 ஆண்டுகளில், இரு தரப்புறவு சீராக வளர்ந்து வருவதற்கு, ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளிப்பது முக்கிய அடிப்படையாகும். அமெரிக்காவின் உள்விவகாரங்களில் சீனா எப்போதும் தலையிட்டதில்லை. இந்த வழிமுறையின்படி, அதைப் போன்ற வழிமுறையில், அமெரிக்கா செயல்பட வேண்டும். ஹாங்காங் தொடர்பான மசோதாவின் பரிசீலனையை அமெரிக்காவின் சிலர் உடனடியாக நிறுத்த வேண்டும். ஹாங்காங் மற்றும் சீனாவின் நலன்களைப் பாதிக்கும் எந்த விதமான நடவடிக்கைகளுக்கும் சீனா வலுவான பதிலடி கொடுக்கும் என்பது உறுதி.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்