இணையம் பற்றிய சீனத் திட்டம்

ஜெயா 2019-10-21 09:39:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

6ஆவது உலக இணைய மாநாடு ஞாயிற்றுக்கிழமை சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் வூசெனில் துவங்கியது. இவ்வாண்டு இணையம் பயன்பாட்டுக்கு வந்த 50ஆவது ஆண்டாகும். நுண்மதி இணையம், திறந்த ஒத்துழைப்பு என்பது நடப்பு மாநாட்டின் கருப்பொருளாகும். 5G,செயற்கை நுண்மதி, ஆளில்லா இயக்கம் உள்ளிட்ட புதிய தொழில் நுட்பங்களின் பயன்பாட்டு சாதனைகள் இம்மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இணைய அறிவியல் தொழில் நுட்பங்களின் வல்லரசுப் பட்டியலில் சீனா படிப்படியாக நுழைவதை இது காட்டுகிறது.

“இணையத்தில் பொது சமூகத்தைக் கூட்டாக உருவாக்குவது” என்ற ஆவணத்தை இம்மாநாடு துவங்கும் முன், அமைப்புக் குழு வெளியிட்டது. உலக இணைய வளர்ச்சியை முன்னேற்றுவதில் சீனா ஆற்றிய புதிய பங்கு இதுவாகும். பல்வேறு தரப்புகளின் எதிர்பார்ப்புக்கு இது ஆக்கப்பூர்வமான பதில் அளித்துள்ளது.

இணையத் தந்தை என்று அழைக்கப்படும் ரோபர்ட் ஏல்லியொட் கான் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறுகையில், அனைத்து நாடுகளும் இணைய மேலாண்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும். உலகில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மேலாண்மை விதியை உருவாக்குவது, எதிர்காலத்தில் இணைய வளர்ச்சியின் முக்கிய விவாதப் பொருளாகும் என்று கூறினார். இதே கருத்தைதான் சீனாவும் முன்மொழிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்