சீனா மீது வெட்கமின்றி அவதூறுக் கருத்துக்களைப் பரப்பிய அமெரிக்க அதிகாரி பீடெர் நவரோ

மதியழகன் 2019-10-21 16:00:57
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவுக்கு எதிராகப் போராடி வரும் அமெரிக்க வெள்ளை மாளிகையைச் சேர்ந்த தேசிய வர்த்தக கவுன்சில் தலைவர் பீடெர் நவரோ, சீனா மீது அவதூறுக் கருத்துக்களைப் பரப்பி வெட்கமின்றி செயல்பட்டு வருவதோடு, பொய் கருத்துக்கள் அடங்கிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

ஆனால், பொய்யானவதந்தி, இறுதியில் வதந்தியாகவே முடிவுக்கு வருவது உறுதி. சமீபத்தில், சி.என்.என் உள்ளிட்ட பல ஊடகங்கள், “டெத் பை சீனா” உள்ளிட்ட பல புத்தகங்களில் உள்ள போலித் தகவல்கள் குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளன.

இதற்குப் பதில் அளித்த நவரோ, புத்தகங்களில் இருக்கும் சீனாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் பொருளியலாளர் ரான் வாரா என்பவர் உண்மையான நபர் அல்ல என்று தெரிவித்தார்.

அவர் கூறியதைத் தொடர்ந்து உடனடியாக பெரும் எதிரொலியை எழுப்பியுள்ளது. இது, நியூயார்க் டைம்ஸ் மற்றும் புத்தகத்தின் கூட்டு எழுத்தாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவரோவுக்கு புத்தகங்களை வெளியிட்ட பீர்சான் நிறுவனம், அவரால் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், தற்போது வரை, அவர் பதவியேற்று வரும் அமெரிக்க வெள்ளை மாளிகை இதற்கு எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நவரோ போன்ற நபர்கள் அமெரிக்க அரசியல் அரங்கில் இடம்பிடித்தது ஏன்? பனிப்போர், பூஜியம் கூட்டுத்தொகை விளையாட்டுப் போட்டி ஆகிய பழையச் சிந்தனைகளுக்கு அமெரிக்காவில் இன்னும் பெரிய இடம் உள்ளது என்பது அதன் அடிப்படைக் காரணமாகும். அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் இந்த வாய்ப்பைக் கைப்பற்றி, சீன அச்சுறுத்தல் என்ற கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். கூடுதலாக, முற்றிலும் பொய்யான விடயங்களை உருவாக்கி, உண்மை என்ற ரீதியில் பரபரப்பை ஏற்படுத்த அவர்கள் முயல்கின்றனர். அதன் விளைவாக, சீன-அமெரிக்க மக்களின் நலன்கள் சீர்குலைக்கப்பட்டுள்ளன. இது, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிப் போக்கிற்குத் தடையாக அமையும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்