​ஹாங்காங் விவகாரத்தின் மூலம் சீனாவை தடை செய்வதில் சூழ்ச்சி தோல்வி

2019-11-23 19:43:38
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உண்மையைப் பொருட்படுத்தாமல், நீதியை மீறி வரும் அமெரிக்க நாடாளுமன்றம், சமீபத்தில் 2019ஆம் ஆண்டு ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக மசோதாவை ஏற்றுக்கொண்டது. அதன் மூலம், ஹாங்காங்கில் தீவிர வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவு அளித்து, சீனாவின் உள் விவகாரங்களில் வன்மையாக தலையிட்டு வருகிறது. இது, ஹாங்காங் விவகாரத்தின் மூலம் சீனாவை தடை செய்ய முயலும் அமெரிக்காவைச் சேர்ந்தவர் சிலரின் கெட்ட நோக்கத்தை தெளிவாக வெளிக்காட்டுகிறது.

வரலாற்று கால ஓட்டத்தில், அமெரிக்க தரப்பின் இத்தகைய அரசியல் சூழ்ச்சி தோல்வியடைவது உறுதி.

முதலாவதாக அமெரிக்காவைச் சேர்ந்தவர் சிலரின் செயல்பாடுகள், ஹாங்காங்கின் ஒட்டுமொத்த நலன்களைப் பாதிப்பதாகவும் ஹாங்காங் மக்களின் விருப்பத்தை மீறுவதாகவும் அமையும். அது, எதிர்ப்பைச் சந்திக்கும். இரண்டாவதாக, ஹாங்காங்கின் சூழ்நிலை சீர்கேடு, அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகள் மற்றும் பிரதேசங்களின் நலன்களைப் பாதிக்கும். அரசியலில் சுய நலன்களைக் கருதும் சில அமெரிக்கர்கள் சொந்த நாட்டின் நிறுவனங்கள் மற்றும் உலகின் பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களைப் பொருட்படுத்தாமல், பிறர்களின் நலன்களைச் சீர்குலைக்க முயன்று வருகின்றனர். இது, பன்னாட்டுச் சமூகத்தின் பொதுவான எதிர்ப்புகளை எதிர்கொள்ளும்.

மூன்றாவதாக, அமெரிக்காவின் சிலர், ஹாங்காங் விவகாரத்தில் தலையீடு செய்வதன் மூலம் சர்வதேச சட்டத்தையும் சர்வதேச உறவின் அடிப்படை விதிகளையும் மீறியுள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்