சர்வதேச சட்டத்தை மீறியுள்ள அமெரிக்காவின் ஆட்சி செயலுக்கு எதிர்ப்பு

மதியழகன் 2019-11-24 19:29:25
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டு ஹாங்காங்கின் மனித உரிமை மற்றும் ஜனநாயக சட்ட முன்மொழிவை அமெரிக்க நாடாளுமன்றம் சமீபத்தில் ஏற்றுக்கொண்டது. இதன் வழி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் என்ற பெயரில், ஹாங்காங் விவகாரம் மற்றும் சீனாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா வெளிப்படையாகத் தலையிட்டு, சர்வதேச சட்டத்தைக் கடுமையாக மீறியுள்ளது.

1970ஆம் ஆண்டு ஐ.நா. பொதுப் பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையில், எந்த ஒரு நாடோ அல்லது நாடுகளின் குழுவோ அதிகாரமின்றி எந்த காரணத்தையும் பயன்படுத்தி நேரடியாகவோ மறைமுகமாகவோ பிற நாடுகளின் உள்விவகாரங்கள் மற்றும் தூதாண்மை விவகாரங்களிலும் தலையிடக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இந்தச் சர்வதேச விதிகள், அமெரிக்காவின் சில அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரியும். ஆனாலும், அறிந்தும் அறியாதது போல் நடிக்கும் அவர்கள், ஹாங்காங்கில் தீவிர வன்முறையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இவ்வாறு செய்வதன் வழி, ஹாங்காங்கின் ஒழுங்கைச் சீர்குலைத்து, சீனாவை தடை செய்வது போன்ற அவர்களின் கெட்ட நோக்கம் தெளிவாகப் புலப்படுகிறது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்