வன்முறை மற்றும் கலவரத்தை நிறுத்துவது மக்களின் அவசர கோரிக்கை
2019ஆம் ஆண்டு ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக சட்ட முன்மொழிவை அமெரிக்க நாடாளுமன்றம் சமீபத்தில் ஏற்றுக்கொண்டது. இதன் மூலம், ஹாங்காங்கில் தீவிர வன்முறையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை அமெரிக்கா வெளிப்படையாக ஆதரித்து வருகிறது. இதற்கு சீனா உறுதியான எதிர்ப்பு மற்றும் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தற்போது, ஹாங்காங் எதிர்கொண்டு வரும் பிரச்சினை, அமெரிக்கா நினைப்பது போல “மனித உரிமை மற்றும் ஜனநாயகம்”விவகாரம் அல்ல. எனவே, ஹாங்காங் உடனடியாக, வன்முறையை நிறுத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்துவது, சமூக ஒழுங்கை மீட்பது, சட்ட ஆட்சி ஒழுங்கைப் பேணிக்காப்பது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியது மிக அவசர கடமையாகும்.
வன்முறைச் செயல், சர்வதேசச் சமூகத்தின் பொது எதிரியாகவும், வன்முறை மற்றும் கலவரத்தை நிறுத்துவது, சர்வதேச சமூகத்தின் பொதுக் கருத்தாகவும் திகழ்கின்றன. அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றும் போராட்டத்தையோ, பிரிட்டனின் இலண்டனில் நடைபெற்ற பெரும் கலவரத்தையோ, இவ்விரு நாடுகளின் அரசுகள் உறுதியுடன் காவல்துறையினரின் மூலம் கண்டிப்புடன் கையாண்டன. சமீபத்தில், ஸ்பெயின், சிலி ஆகிய நாடுகளின் அரசுகள், சட்டப்படியாக வன்முறையாளர்களைக் கைது செய்து வன்முறைச் செயலை உறுதியாக ஒடுக்கியுள்ளன. வன்முறையை நிறுத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்துவதே, உலகில் பொதுக் கோட்பாடு என்பதை இவை முழுமையாக நிரூப்பிக்கின்றன.
அதிகம் படிக்கப்பட்டவை
புதிய செய்திகள்
- சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்
- சீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்
- அதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு
- ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்
- ஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு