சீன மூலதனச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை!

மதியழகன் 2019-11-27 18:43:54
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நவம்பர் 26ஆம் நாள், சீனப் பங்குச் சந்தையின் வர்த்தக நேர முடிவுக்குப் பின், உலகின் மிகப் பெரிய குறியீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கேபிடல் இண்டர்நேஷனல் ( MSCI), சீனப் பங்கு சந்தை பத்திரங்களின் சதவீதத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியது. இதனால், இந்த நிறுவனத்தில் சீனப் பத்திரங்களின் விகிதம் 20 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், எஸ்&பி. டௌஜோன்ஸ் குறியீட்டு நிறுவனம், ப்ட்சே ரூச்சேல் ஆகியவையும், சீனப் பங்கு சந்தைப் பத்திரங்களின் சதவீதத்தை அதிகரித்துள்ளன.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முடிவு மற்றும் செயல், சீனா தனது மூலதனச் சந்தையின் திறப்பு நிலையை விரிவாக்குவதன் தெளிவான சாதனைகளை வெளிக்காட்டுகிறது. இதனால், சீன மூலதனச் சந்தை மீதிருந்த உலகின் முதலீட்டாளர்களின் நம்பிக்கை தொடர்ச்சியாக மேம்பட்டு வருகிறது.

சீன மூலதனச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளின் அதிகரிப்புக்கு, இரண்டு முக்கிய காரணிகள் உள்ளன. ஒருபுறம், தற்போது சீன நாணயத்தின் மதிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், உலகின் நிதி செல்லும் இடமாக சீனாத் தொடர்ந்து திகழ்கிறது. மறுபுறம், சீனா தொடர்ந்து தனது மூலதனச் சந்தையின் திறப்பை விரிவாக்கி வருகிறது. அதோடு, பல்வகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதால், பன்னாட்டு மூலதனத்திற்கு உரிய முதலீட்டு வாய்ப்பு ஏற்படுகிறது.

இவ்வாண்டில், 24ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள அந்நிய முதலீடு சீனப் பங்குச் சந்தையில் புழங்கியுள்ளது. இந்த எண்ணிக்கை, பன்னாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது. மேலும், சீனாவின் பங்குகள், எம்.எஸ்.சி.ஐ நிதியில் சேர்க்கப்படுவதால், எதிர்வரும் 5 முதல் 10 ஆண்டுகளில், 60ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அன்னிய முதலீட்டுத் தொகை சீன பங்குச் சந்தைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்