எந்த விதமான வெளிப்புற அச்சுறுத்தல்களிடமும் சீனா சரணடையாது

மதியழகன் 2019-11-29 19:12:26
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த 5 திங்கள் காலத்தில், ஹாங்காங்கில் வன்முறைச் செயல் பெருமளவில் ஏற்பட்டு, இடைவிடாமல் தீவிரமாகியது. இதனால் பாதிக்கப்பட்ட ஹாங்காங் மிகவும் அபாயமான நிலையில் சிக்கிக் கொண்டுள்ளது. வன்முறையாளர்கள், போக்குவரத்தைத் துண்டித்தல், பொது வசதிகளுக்கு தீ வைத்து சேதப்படுத்துதல், காவல்துறையினர் மற்றும் அப்பாவி மக்களைத் தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டனர். மேலும், அவர்களின் வன்முறைச் செயலால், ஒருவர் உயிரிழந்தார்.

வன்முறையை நிறுத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தி, சமூக ஒழுங்கை மீட்கும் முக்கிய கட்டத்தில் ஹாங்காங் இருக்கும் போது, ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக மசோதாவை அமெரிக்கா சட்டமாக்கியது. அதன் மூலம் ஹாங்காங்கில் தீவிர வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உதவி அளிக்க அமெரிக்கா முயன்றுள்ளது. இச்செயல், ஹாங்காங்கின் செழுமை மற்றும் நிலைப்புத்தன்மையைச் சீர்குலைத்து, சீனத் தேசத்தின் பெரும் மறுமலர்ச்சி முன்னேற்றப் போக்கிற்கு தடையையும் ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இத்தைகைய செயலை சீன மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டர்.

சீன மக்கள் தீய சக்தியைக் கண்டு ஒருபோதும் அஞ்சியதில்லை. எந்த விதமான வெளிப்புற அச்சுறுத்தல்களிடமும் சீன மக்கள் சரண் அடைய மாட்டர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்