ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ள மக்கௌ

மதியழகன் 2019-12-18 19:34:41
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மக்கௌ தாய்நாட்டுடன் இணைந்த 20ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட மாநாட்டிலும், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 5ஆவது அரசின் பதவியேற்பு விழாவிலும் கலந்து கொள்வதற்காக, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 18ஆம் நாள் பிற்பகல் மக்கௌவைச் சென்றடைந்தார். மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தையும் அவர் மேற்பார்வை செய்ய உள்ளார்.

மக்கௌ சர்வதேச விமான நிலையத்தில் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்துகையில்,

கடந்த 20 ஆண்டுகளில் மக்கௌ பெற்றுள்ள சாதனைகளும் முன்னேற்றங்களும் பெருமை அளிப்பதாக உள்ளன. ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி வருவதில் மக்கௌவின் அனுபவங்கள் மற்றும் தனிச்சிறப்புகள் தொகுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில், மக்கௌ பொருளாதாரம் விரைவாக வளர்ந்து மக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்ச்சியாக மேம்பட்டு, சமூக இணக்கம் காணப்பட்டுள்ளது. இது வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக விரைவாகவும் சிறப்பாகவும் வளர்ந்து வந்துள்ள காலம் ஆகும். மக்கௌவில் ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற கோட்பாட்டின் வெற்றிகரமான நடைமுறையாக்கத்தை, இது உலகிற்கு எடுக்காட்டுகிறது.

மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசம் சட்டப்படியே தன்னாட்சி அதிகாரங்களைச் செயல்படுத்தி வருகிறது. மக்கௌ மக்கள், வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக அதிக ஜனநாயக உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவித்து வருகின்றனர்.

தாய்நாட்டுடன் இணைந்த 20 ஆண்டுகளில், மக்கௌ பெற்றுள்ள சாதனைகளின் மூலம், ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள், வரலாற்றுப் பிரச்சினைகளுக்கு மிக சிறந்த தீர்வு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது, தாய்நாட்டுடன் இணைந்த பிறகு நீண்டகால செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை அடைந்ததற்கு முக்கிய காரணம் இந்த அமைப்புமுறையே ஆகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்