மக்கௌவில் சீரான பொருளாதார வளர்ச்சி

பூங்கோதை 2019-12-19 20:47:10
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

டிசம்பர் 19ஆம் நாள் முற்பகல், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் தலைமை அதிகாரி சுய் சைஆன்னுடன் இணைந்து, சீனாவுக்கும் போர்ச்சுகல் மொழி பேசும் நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒத்துழைப்பு சேவை வளாகத்தை மேற்பார்வையிட்டார். சீனா, போர்ச்சுகல் மொழி பேசும் நாடுகளுடன் நட்பார்ந்த ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு இந்த புதிய வளாகம் உரிய சேவையை வழங்கும்.

பல்வகை பொருளாதாரங்கள் கொண்ட தொடரவல்ல வளர்ச்சிப் பாதையில் மக்கௌ முன்னேறுவது பயன் மிக்கது. பொருளாதாரத்தின் நெகிழ்வு தன்மை உள்ளார்ந்த ஆற்றலை இது வலுப்படுத்தியுள்ளது என்பதை உண்மைகள் நிரூபித்துள்ளன. தற்போது, சீனா சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்கி, வெளிநாட்டுத் திறப்பை மேலும் விரிவுப்படுத்தி வருகிறது. மக்கௌ, நாட்டின் வளர்ச்சித் திட்டத்தில் ஆக்கமுடன் பங்கெடுத்து, பொருளாதாரத்தின் புதிய அதிகரிப்பு துறைகளை வளர்த்து, பொருளாதாரக் கட்டமைப்பைத் தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறது. இதன்மூலம் பல்வகை பொருளாதாரங்கள் கொண்ட தொடரவல்ல வளர்ச்சி முறை புதிய பயனுள்ள சாதனைகளைப் பெற்று முன்னேறுவது உறுதி.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்