உலக நிர்வாகத்தின் மேம்பாட்டை விரைவுபடுத்தும் சீனா

2019-12-30 14:38:08
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த சில ஆண்டுகளில், பன்னாடுகள் முக்கிய அபாயங்களையும் அறைகூவல்களையும் கையாளும் போது, ஒத்த கருத்துக்கு வருவதில் இன்னல்கள் காணப்பட்டுள்ளன. உலகப் பொருளாதார நிர்வாக அமைப்பு முறை, சர்வதேச கட்டமைப்பின் மாற்றத்துக்கும், புதிதாக வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சி, இந்நாடுகளின் கருத்து வெளிப்பாட்டு உரிமையின் உயர்வுக்கு பொருந்தியதாக இல்லை என்பதே, இதற்கான காரணமாகும்.

கடந்த சில ஆண்டுகளில், சொந்த வளர்ச்சி நலன் மற்றும் சர்வதேச சமூகத்தின் பொது நலன்களைப் பேணிக்காக்கும் கோணத்திலிருந்து, உலக நிர்வாக அமைப்பு முறை சீர்திருத்தத்தில் சீனா ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து, கருத்து, சிந்தனை மற்றும் செயல் திட்டங்களை முன்வைத்துள்ளது. கூட்டாக விவாதிப்பது, கூட்டாக உருவாக்குவது, கூட்டாக அனுபவிப்பதென்ற உலக நிர்வாக அமைப்பு முறையை உருவாக்கி, மனித குல பொதுச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுவது, இதன் நோக்கமாகும்.

உலக நிர்வாகச் சீர்திருத்தத்தை முன்னேற்றுவதில், சீனா அதிக செயல்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் ஆக்கப்பணியை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம், இத்திட்டத்தின் வழி, 2019ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் இறுதி வரை, சீனா 137 நாடுகள் மற்றும் 30 சர்வதேச அமைப்புகளுடன் 197 ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளது. உலக வங்கி 2019ஆம் ஆண்டு ஜூன் திங்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணி பன்முகங்களிலும் செயல்படுத்தப்பட்ட பின், உலக வர்த்தகம் 6.2 விழுக்காடு அதிகரிக்கும். இப்பாதையின் நெடுகிலுள்ள நாடுகளின் வர்த்தகத் தொகை, 9.7 விழுக்காடு அதிகரிக்கும். உலகப் பொருளாதார வளர்ச்சி, மந்தமான நிலையில் இருக்கும் வேளையில் சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டை அதிகரிக்க ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணி முக்கியப் பங்காற்றியுள்ளது.

தற்போது, சர்வதேச சமூகம் அறைகூவல்களை எதிர்நோக்குவதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. இச்சூழலில் உலக நிர்வாக இன்னல்களைக் கையாள்வது அவசரமான கடமையாகும். பன்னாடுகளுடன் இணைந்து, சர்வதேச ஒழுங்கு மேலும் நியாயமான திசையை நோக்கி வளர்வதை முன்னேற்றி, உலக அமைதி மற்றும் நிதானத்துக்கு அமைப்பு முறை உத்தரவாதம் அளித்து, சர்வதேச சமூகத்துக்கு மேலதிக நலன்களை வழங்க சீனா விரும்புகிறது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்