சீனாவின் ஈர்ப்பு சக்தியை எடுத்துக்காட்டும் “ஷாங்காய் வேகம்”

மதியழகன் 2020-01-07 19:12:39
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள டெஸ்லா மாடல் 3 ரக மின்சார வாகனங்கள் ஜனவரி 7ஆம் நாள் செவ்வாய்கிழமை முதல்முறையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில், ஷாங்காய் பிரமாண்ட ஆலையில் மாடல் வை வகையான உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும் அமெரிக்காவின் முன்னிலை மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா அறிவித்துள்ளது.

ஷாங்காயிலுள்ள டெஸ்லா நிறுவனத்தின் புதிய ஆலை தொடங்கப்பட்டு, ஓராண்டு காலத்திற்குள்ளாகவே புதிய வாகனம் தயாரிக்கப்பட்டது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்த ஆலையில், கிட்டத்தட்ட 1,000 வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. முன்னதாக, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மாஸ்க் பேசுகையில், ஷாங்காய் வேகம் அதிசயமான ஒன்று என்று பாராட்டினார்.

“ஷாங்காய் வேகம்” என்பது, சீனாவின் வலுவான தொழில் நுட்பம் மற்றும் திறமை ரீதியிலான ஆதாரத்தை வெளிக்காட்டுகிறது. இந்த வலுவான ஆதாரத்துடன், டெஸ்லா நிறுவனத்தின் ஷாங்காய் ஆலையின் உற்பத்தி வேகம் மற்றும் உயர் தொழில் நுட்பம் உலகின் முன்னிலையை எட்டியுள்ளது.

மேலும், சீனச் சந்தை மீதான வெளிநாட்டு முதலீட்டின் ஆர்வத்தை, ஷாங்காய் வேகம் வெளிக்காட்டுகிறது. சுமார் 140 கோடி மக்கள் தொகை மற்றும் 40 கோடி நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் தொகை கொண்டுள்ள சீனச் சந்தையில் பெரிய நுகர்வுத் தேவை உள்ளது. இதனால், உலகச் சந்தை என்ற பெரும் பெயர் பெற்றுள்ள சீனாவின் ஈர்ப்பு சக்தி தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது. வாகனத் தொழிலை பொறுத்தவரை, மரபுவழி வாகனங்களின் மிகப் பெரிய சந்தையாகவும், புதிய ஆற்றல் வாகனங்களின் மிகப் பெரிய சந்தையாகவும் சீனா விளங்குகிறது.

கடைசியாக, சீனா தொடர்ச்சியாக வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்கி வருவதால், ஷாங்காய் வேகம் என்ற சாதனையை பெற முடிந்தது. சீனாவின் புதிய ஆற்றல் வாகனத் துறையில் வெளிநாட்டு முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்ட பிறகு 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதியுடன் நிறுவப்பட்டு, ஷாங்காய் டெஸ்லா ஆலை இயங்கி வருகிறது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்