மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் தீவிரமானால், யாருக்கும் நன்மை இல்லை!

2020-01-08 19:58:45
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பதற்றம் தொடர்ந்து தீவிரமானால் ஏற்படும் விளைவு, எந்த ஒரு தரப்பின் நலனுக்கு பலனளிக்காது.

அதே சமயத்தில், இந்த பதற்றமான சூழ்நிலை, உலகளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை, பல நாடுகள், மத்திய கிழக்குப் பிரதேசத்திலுள்ள தனது தூதரக அலுவலர்களை வெளியேற்றி அல்லது குறைத்து வருகின்றன. கூடுதலாக பல நாடுகள், தனது குடிமக்களுக்கு சுற்றுலா பாதுகாப்பு தொடர்பான எச்சரிச்சை விடுத்துள்ளன.

சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் தங்கச் சந்தையில் விலை திடீரென பெரிய அளவில் உயர்ந்துள்ளது. கடந்த நுற்றாண்டில் 4வது மத்திய கிழக்குப் போரினால், எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டது. அதன் விளைவாக, வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது. வரலாற்றுப் பாடத்தில் இருந்து அனைவரும் அறிந்ததே, மத்திய கிழக்குப் பிரதேசத்தின் அமைதி மற்றும் நிலைப்புத்தன்மை முழு உலகிற்கும் மிகவும் முக்கியமானது. இது குறித்து, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்ற இதழ் 6ஆம் நாள் வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்கா இல்லை என்றால், மத்திய கிழக்குப் பிரதேசம், பெரும் குழப்பத்தில் சிக்கி இருக்கும் என்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மரபுச் சொல். ஆனால், தற்போது பார்வையில், மத்திய கிழக்குப் பிரதேசத்தில் முக்கிய சீர்குலைப்பவர், அமெரிக்காவாகத் தான் உள்ளது.

தற்போது, தற்காப்பு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. போர் தொடுக்கப் போவதில்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்.மத்திய கிழக்குப் பிதேசத்தின் பதற்ற நிலையைக் குளிர்விப்பது அவசியமானது. இது, பல்வேறு தரப்புகளுக்கு உரிய தேர்வு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்