நோய் பரவல் தடுப்பில் எண்ணியல் பொருளாதாரத்தின் பெரும் பயன்

வான்மதி 2020-02-02 18:11:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரஸால் உண்டாகிய நுரையீரல் அழற்சி நோய் பரவல் தீவிரமாகி வரும் நிலையில் சீனா கண்டிப்பான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நோய் பரவல், சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு மீதான கவலையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலே, இணைய வழிப் பொருளாதாரம் உயர்நிலையில் வளர்ந்து வரும் தற்காலத்தில் மக்கள் வெளியே செல்லாமல் இருந்தாலும், இயல்பாகவே பணிபுரிந்து, கல்வி பயின்று, நுகர்வு செய்ய முடியும். தொற்று நோய் பாதிப்புக் காலத்தில், சீனச் சமூகத்தின் இயல்பான செயல்பாட்டுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஆதாரத்தூணாக எண்ணியல் பொருளாதாரம் மாறி வருகிறது.

புள்ளிவிவரங்களின்படி, 2012 முதல் 2018ஆம் ஆண்டு வரை சீனாவின் எண்ணியல் பொருளாதார அளவு 11 லட்சத்து 20 ஆயிரம் கோடி யுவானிருந்து 31 லட்சத்து 30 ஆயிரம் கோடி யுவானாக அதிகரித்து, உலகளவில் 2ஆவது இடத்தைப் பிடித்தது.

அண்மையில் சீனாவின் பல்வேறு மின்னணு வணிக நிறுவனங்கள் தங்களது வினியோகத் தொடரின் மேம்பாட்டைப் பயன்படுத்தி வணிகப் பொருட்களை விற்பனை செய்து, சிறப்புக் கால சந்தை வினியோகத்தை உறுதி செய்வதில் ஆக்கப்பூர்வப் பங்கினை அளித்துள்ளன.

இதனிடையே, காணொளி, நேரலை, இணைய விளையாட்டு, இணையக் கல்வி போன்றவற்றில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் பெருமளவில் அதிகரித்து, எண்ணியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை முன்னேற்றி வருகின்றனர்.

நீண்டகாலமாக சீனா கொண்டுள்ள தொழில் நுட்ப மேம்பாடு, எண்ணியல் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு பயனளிக்கிறது. 5ஜி, செயற்கை நுண்ணறிவு போன்ற உயர் தொழில் நுட்பங்கள், நோய் தடுப்புக் காலத்தில் சீனர்களின் வேலை மற்றும் வாழ்க்கைக்கு வலுவான ஆதரவை வழங்குகின்றன.

வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் சுறுசுறுப்புடன் இருக்கும் சீனாவின் பொருளாதாரம் குறுகிய காலம் பாதிப்பை சந்திக்கும். ஆனால், எண்ணியல் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியினால் இந்தப் பாதிப்பு பெருமளவில் குறைந்து விடும். வைரஸ் பாதிப்பை வென்றெடுத்து, பொருளாதாரத்தின் நீண்டகால சீரான வளர்ச்சியை நிலைநிறுத்துவதில் சீனாவுக்கு நம்பிக்கையும் திறமையும் உண்டு.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்