வைரஸ் பாதிப்பைப் பயன்படுத்தி நன்மை பெற விரும்பும் அமெரிக்க அரசியல்வாதிகள்!

வான்மதி 2020-02-04 19:09:32
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த சில நாட்களாக, புதிய ரக கரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக போராடி வரும் சீனாவுக்கு பன்னாட்டு சமூகம் பல்வேறு வழிகளில் ஆதரவு மற்றும் உதவிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில், சீனாவில் நிகழ்ந்த வைரஸ் பரவல் ஆக்கத்தொழிலின் வேலை வாய்ப்புகள் வேகத்துடன் அமெரிக்காவுக்கு திரும்பத் துணைபுரியும் என்ற அபத்தமான கூற்றை வெளியிட்ட அமெரிக்க வணிக அமைச்சர் ரோஸ், சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டிற்குரிய இலக்காக விளங்குகிறார்.

தொற்று நோய் பரவல், மனிதகுலம் எதிர்கொள்ளும் பொது சவாலாகும். அதற்கு எல்லை இல்லை. சீன மக்கள் மட்டுமல்ல உலக மக்களையும் பாதுகாக்கும் விதமாக, தற்போது சீன அரசு மிகக் கண்டிப்பான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உலகளவில் ஒரேயொரு மேல்நிலை வல்லரசான அமெரிக்கா, இதுவரை சீனாவுக்கு எந்த பயனுள்ள உதவியையும் வழங்கவில்லை. மாறாக, பீதி மற்றும் பயமான உணர்வை அது ஏற்படுத்தி பரப்பி வருகிறது.

மேலும், நடப்பு அமெரிக்க அரசு தனது ஆக்கத்தொழிலை வளர்க்கும் முயற்சி பயனளிக்காத நிலையில், சீனாவில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்பைப் பயன்படுத்தி ஆக்கத்தொழிலின் வளர்ச்சி வாய்ப்பை அமெரிக்காவுக்குத் திரும்பி அழைக்க விரும்பிய ரோஸின் கூற்று, சரியான தீர்வுமுறை இல்லாத நிலையில் ஏற்பட்ட கற்பனையாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்