கரோனா வைரஸ் நிலைமை பற்றிய அமெரிக்காவின் தவறான கருத்து

2020-02-05 17:13:04
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தற்போது, கரோனா வைரஸ் பரவலை சீனா முழுமுயற்சியுடன் தடுத்து வருகிறது. சர்வதேச சமூகமும் சீனாவுக்கு ஆதரவு மற்றும் உதவியளித்து வருகிறது. ஆனால், உலகளவில் மருத்துவ நிலை முன்னணியில் இருக்கின்ற அமெரிக்கா, இதுவரை, சீனாவுக்கு எந்தப் பயனுள்ள உதவிகளையும் அளிக்கவில்லை. அதற்கு மாறாக, வூ ஹானிலுள்ள அமெரிக்கத் துணை நிலை தூதரகத்தைச் சேர்ந்த பணியாளர்களை அவசர அவசரமாக திரும்ப அழைத்துக் கொண்டது. அத்துடன், அமெரிக்காவுக்குச் செல்லும் சீன மக்களின் மீது கட்டுபாட்டு நடவடிக்கைகளை விதித்து பயப்பீதியை இடைவிடாமல் பரவல் செய்து வருகிறது.

கரோனா வைரஸை எதிர்ப்பது பற்றிய சீனாவின் முயற்சிகளை, உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பாராட்டியுள்ளார். அத்துடன், அவர் 7 ஆலோசனைகளை வழங்கினார். சர்வதேசச் சுற்றுலா பயணம் மற்றும் வர்த்தகத்தின் மீது, தேவையில்லாத கட்டுபாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு காரணம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்