சீன அமைப்பு முறையை அவதூறு பழிக்கும் வைரஸ் போன்ற கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும்

வான்மதி 2020-02-06 17:54:55
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தற்போதைய சீனா, அமைப்பு முறை ரீதியான மேம்பாடுகளின் மூலம் வைரஸ் பரவல் தடுப்புக்காக ஒருமைப்பாட்டுடனும் முழுமுயற்சியுடனும் போராடி வருகிறது. உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ், சீனாவின் வலிமைமிக்க அமைப்பு முறையையும் பயனுள்ள நடவடிக்கைகளையும் பாராட்டியுள்ளார். ஆனால், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் போம்பியோ சீனாவின் ஆளும் கட்சி மற்றும் அமைப்பு முறையை அச்சுறுத்தலாகப் பழித்தூற்றினார். உலகளவில் மிகப் பெரிய வல்லரசின் முதன்மை தூதாண்மை அதிகாரியான போம்பியோவின் தவறான கூற்று, அவரது இரக்கமற்ற மனப்பான்மை மற்றும் ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது, மனித நேயத்தை மீறியதோடு, சீனா அமெரிக்கா சேர்ந்து பொது அறைகூவல்களைச் சமாளிப்பதற்கும் தடை செய்துள்ளது.

பிரிட்டன் அரசு தனது 5ஜி வலையமைப்பின் கட்டுமானத்தில் பங்கெடுக்க ஹுவாவெய் நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவதாக அண்மையில் தெரிவித்தது. இந்நிலையில் போம்பியோ மேற்கூறிய தவறான கருத்தைப் பரப்பினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சராக அவர் பதிவியேற்ற பிறகு, சீனா பற்றி அவதூறு செய்வது வெளிநாட்டுப் பயணத்தில் இன்றியமையாத ஒரு பகுதி. ஆனால், போம்பியோ போன்று பொய் கூற்றை பேசி வரும் அரசியல்வாதிகள் எப்படி முயற்சி செய்தாலும், நம்பத்தக்க சான்றுகள் எதையும் வழங்க முடியவில்லை.

சீன அமைப்பு முறையின் மேம்பாடு கடந்த 70 ஆண்டுகளின் வளர்ச்சி சாதனைகளின் மூலம் போதுமான அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சீன அமைப்பு முறை மீது குற்றம் சுமத்திய போம்பியோவின் தவறான செயல், இருதரப்பும் ஒத்துழைத்து பொது சவால்களைச் சமாளிப்பதற்கு வைரஸ் போன்று அமைந்து, தற்போதைய நிலைமையைப் பயன்படுத்தி அரசியல் ரீதியான சுயநலனைப் பெற முயலும் செயலாகும். எனவே இது போன்ற கருத்து வைரஸ் போல் நீக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்