நீண்டகாலத்திற்குச் சீனப் பொருளாதாரம் சீராக வளரும் போக்கு மாறாது

வான்மதி 2020-02-07 20:54:58
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 7ஆம் நாள் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசியில் பேசிய போது, தொற்று நோய் பரவலை வென்றெடுக்க சீனாவுக்கு நம்பிக்கை மற்றும் திறமை உண்டு என்றும், சீனப் பொருளாதாரம் நீண்டகாலத்திற்கு சீராக வளர்ந்து வரும் போக்கு மாறாது என்றும் உறுதிப்படுத்தினார். அதேநாள், புதிய ரக கரோனா வைரஸுக்கு எதிரான சீன அரசவையின் கூட்டு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயங்குமுறை நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில், வைரஸ் தடுப்புக்கான நிதி ஆதரவு கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டதோடு, சீனப் பொருளாதாரம் நீண்டகாலத்திற்கு சீராகவும் உயர்தரமுடனும் வளர்ந்து வரும் அடிப்படை மாறாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

வைரஸ் பரவல் தடுப்புக்கான நடுவண் அரசின் கொள்கை முடிவுகளையும் ஏற்பாடுகளையும் சீனாவின் பல்வேறு அமைச்சகங்கள் பயனுள்ள நடவடிக்கைகளின் மூலம் செயல்படுத்தி வருகிறது.

வைரஸ் பரவலால் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு, தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியின் முனேற்றம் மற்றும் பயனுடன் தொடர்புடையது. சீன அரசு, நிதி மற்றும் நாணயத் துறையிலுள்ள போதுமான வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உகந்த கொள்கை நடவடிக்கைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, வைரஸ் தடுப்புக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதிப்படைந்த தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் சில நடவடிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மருத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தயாரிக்கும் முக்கிய நிறுவனங்களுக்கு சீன மத்திய வங்கி சலுகையுடன் கூடிய சிறப்பு கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சந்தையை நிதானப்படுத்தும் வகையில் சீனா போதிய அளவில் முன்னேற்பாடுகளை செய்துள்ளது. மேலும், முன்னதாக சீனா பெற்றுள்ள சாதகமான நிலைமைகள், சீனப் பொருளாதாரத்தின் நீண்டகால சீரான வளர்ச்சிக்கு உறுதியான அடிப்படையை உருவாக்கியுள்ளன.

உலகப் பொருளாதார வளர்ச்சியில் விசைப்பொறி போன்ற சீனப் பொருளாதாரம் வைரஸ் பரவலால் ஓரளவு பாதிக்கப்பட்ட போதிலும், வைரஸ் தடுப்புக்கான போராட்டத்தில் வெற்றிப் பெற்று, பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்துவது உறுதி.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்