அறைகூவலைச் சமாளிக்கும் நம்பிக்கை சீனத் தொழில் நிறுவனங்களுக்கு உண்டு

ஜெயா 2020-02-10 18:59:09
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த சில நாட்களில், புதிய ரக கரோனா வைரல் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியின் பின்னணியில், சீனத் தொழில் நிறுவனங்கள் படிப்படியாக இயக்கத்துக்குத் திரும்பியுள்ளன. இந்நிலையில் இத்தொழில் நிறுவனங்கள் பல காரணிகளைப் பயன்படுத்தி, வளர்ச்சிக்கான புதிய வழிமுறைகளைத் தேடுகின்றன.

முதலாவதாக, அவை, மேலாண்மை முறையைச் சரிப்பார்க்கின்றன. எடுத்துக்காட்டாக, சில சில்லறைத் தொழில் நிறுவனங்கள், கடைகளிலிருந்து இணைய மேடைக்கு மாறி வருகின்றன. இரண்டாவதாக, சில தொழில் நிறுவனங்கள் பணியைத் துவங்கிய பிறகு, இலகுவான பணி நேர முறையை அறிமுகப்படுத்தி உள்ளன.

நோய் பரவல் சீனப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அது தற்காலிகமானதே. சீனப் பொருளாதாரம் சீராகவும் உயர்தரமாகவும் அதிகரிக்கும் அடிப்படை மாறாது என்று மென்மேலும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொருளாதாரத் துறையினர் கருதுகின்றனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்