கரோனை வைரஸ் பரவலைத் தடுப்பதில் குடியிருப்புகளே முக்கியம்

மதியழகன் 2020-02-12 19:34:17
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியின் முதலாவது களமாக, குடியிருப்புகள் இருக்கின்றன. வைரஸ் வெளிப்புறங்களில் இருந்து நுழைவதையும் உள்புறங்களுக்குள் பரவுவதையும் தடை செய்யும் எல்லையில், குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் வைரஸ் தடுப்புப் பணி குறித்து பேசுகையில், குடியிருப்புகள் உரிய பங்களிப்பை ஆற்றி போதிய பாதுகாப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தற்போது, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, இன்னும் சிக்கலான நிலையில் இருக்கிறது. இந்த முக்கியக் காலக்கட்டத்தில், ஷி ச்சின்பிங்கின் இந்த உத்தரவு, குடியிருப்புகளிலுள்ள நோய் தடுப்புப் பணிகளுக்குத் அடுத்த கட்டத் திசை வழிகாட்டி, குடியிருப்புப் பணியாளர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

11ஆம் நாள் செவ்வாய்கிழமை அன்று, ஹுபெய் மாநிலம் நீங்கலாக, சீனாவின் பிற பகுதிகளிலும் 377 பேருக்கு இவ்வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை, தொடர்ச்சியாக 8ஆம் நாளாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணம், குடியிருப்புகளில் நோய் தடுப்புப் பணியை சீனா வலுப்படுத்தி வருவதே ஆகும்.

நோய் தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் அதேசமயத்தில், பொது மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்யும் விதமாக, குடியிருப்புகள் முயற்சி எடுத்து வருகின்றன. இதற்காக, இணையதள வர்த்தகம், குடியிருப்புப் பணியாளர்கள் உதவி செய்தல் உள்ளிட்ட பல்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் மக்களே முதன்மை என்ற கருத்து நடைமுறையில் உள்ளது.

இந்த கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம், குடியிருப்புப் பணியாளர்களின் செயற்திறன் சோதனையாகும். சீனாவின் குடியிருப்புகளின் ஆட்சி முறையை முழுமைப்படுத்தும் வாய்ப்பாகவும் இது உள்ளது. பல்வேறு பகுதிகளிலுள்ள குடியிருப்புகள், முன்னேற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்தி, நெருக்கமாக மக்களைச் சார்ந்திருப்பதன் மூலம், வைரஸ் பரவலைத் தடுக்கும் களமாக மாறச் செய்ய முடியும். அதன் மூலம், கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் சீனா வெகுவிரைவில் வெற்றி பெறும் வாய்ப்பை குடியிருப்புகளால் உருவாக்க முடியும் என்று நம்புகின்றோம்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்