நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் சீனா மீது அவதூறு

தேன்மொழி 2020-02-14 21:43:25
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனர்களின் கடின முயற்சியுடன், புதிய ரக கரோனா வைரல் பரவல் தடுப்புப் பணியில் ஆக்கப்பூர்வமான பயன் காணப்பட்டுள்ளது. பிப்ரவரி 13-ஆம் நாளில், ஹுபெய் மாநிலத்தைத் தவிர, சீனாவின் மற்ற மாநிலங்களில் புதிதாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனோரின் எண்ணிக்கை 267ஆகும். இது 10 நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சர்வதேச சமூகத்தில் இத்தகவல் மகிழ்ச்சியை அளித்துள்ளபோதும், சில இணக்கமற்ற ஒலியும் எழுந்துள்ளது.

”சார்ஸ், பறவைக் காய்ச்சல், புதிய ரக கரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்கள் ஏன் சீனாவில் ஏற்பட்டது?”என்ற கட்டுரையை நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் அண்மையில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரையில், சீனாவை நோயின் ஊற்றுமூலம் என்பதுபோல காட்டப்பட்டுள்ளது.

புதிர ரக கரோனா வைரஸ் பரவிய பின், நியூயார் டைம்ஸில் இது போன்ற பொறுப்பற்றக் கட்டுரைகள் பலமுறை வெளியிடப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் சீன அரசின் நோய் தடுப்புப் பணியைக் குறைத்து மதிப்பிட்டு வருகின்றன. இக்கட்டுரைகளில் வெளிகாட்டப்பட்ட தீய நோக்கமும் தவறான எண்ணமும், வாசகர்களுக்கு ஏமாற்றத்தையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தி வருகின்றன.

இது தொடர்பாக, சிங்கப்பூர் தலைமை அமைச்சரின் மனைவி தனது சமூக ஊடகப் பக்கத்தில், தொற்று நோயைப் பயன்படுத்தி சீனாவின் நிர்வாக அமைப்புமுறை மீது நீயூயார்க் டைம்ஸ் குற்றஞ்சாட்டிய கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இந்தக் கட்டுரை பற்றிய அவர் கூறுகையில், ஃப்ளூ-பி காய்ச்சல் அமெரிக்காவில் பெருமளவில் பரவிய சமயத்தில் அது எப்படிப் பரவியது? என்று கேள்வி எழுப்பினார்.

உலகமயமாக்கக் காலத்தில், சீனா ஒரு நாள் முன்னதாகவே தொற்று நோயைத் தோற்கடித்தால், உலகளவில் வர்த்தகம், சுற்றுலா, மக்களின் பரிமாற்றம் முதலியவை ஒரு நாள் முன்னதாகவே இயல்புக்குத் திரும்பும். பல்வேறு நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பும் குறையும். இது. சீனாவும் உலகும் கொண்டுள்ள ஒத்த கருத்து ஆகும். சீனாவின் வெற்றி, உலக வெற்றி ஆகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்