சீனாவில் வைரஸ் பரவல் நிலைமை பற்றிய உண்மை

ஜெயா 2020-02-15 20:30:28
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சர்வதேசச் சமூகம் சீனாவில் கொவைட்-19 வைரஸ் பரவல் நிலைமையை அறிந்து கொள்ளும் விதமாக சீன அரசவையின் செய்தி அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டங்கள், நடைபெற்றன. அப்போது வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு பணி குறித்து, 5G நேரலை மற்றும் காணொலித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, கேள்விகள் கேட்கப்பட்டன.

சீன மக்களின் கடினமான கூட்டு ஒத்துழைப்புடன், வைரஸ் பரவல் நிலைமையில் ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. தடுப்புப் பணி சாதனையைப் பெற்றுள்ளது. இதன் பின்னணியில், தெளிவான, வெளிப்படையான கோட்பாடு முக்கிய பங்காற்றியுள்ளது.

சீனாவின் முயற்சி மற்றும் வெளிப்படைத் தன்மையை அமெரிக்கா வெகுவாகப் பாராட்டுவதாக அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால், அமெரிக்க வெள்ளைமாளிகையின் தேசிய பொருளாதார குழுத் தலைவர் லார்ரி குட்வாவ் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளிக்கையில், சீனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையில் வெளிப்படையாக இல்லை என குற்றஞ்சாட்டினார். சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான புள்ளிவிவரத்தில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வு குறித்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.

12ஆம் நாள் புதிதாக உறுதி செய்யப்பட்ட பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரிப்பதற்கு காரணம் குறித்து சீன அரசு விவரமான விளக்கம் அளித்தது. ஆனால், குற்றஞ்சாட்டிய லார்ரி குட்வாவு, சீனாவின் அறிக்கையைப் படிக்கவில்லையா அல்லது மருத்துவ அறிவு அவருக்கு இல்லையா என்பது தெரியவில்லை.

உண்மையில், சீனா உலகத்துடன் இணைந்து நோய் தடுப்புக்கான பணியில் ஒத்துழைப்பு மேற்கொள்வது, வெளிப்படியாக நடந்து கொண்டுள்ளதை மற்றொரு தகவல் எடுத்துக்காட்டுகிறது. அதாவது, கொவைட்-19 வைரஸ் தடுப்புக்கான சர்வதேச வல்லுநர் குழு இந்த வார இறுதியில் சீனாவுக்கு வர உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனா மற்றும் இவ்வமைப்பின் வல்லுநர்கள், சீனா மற்றும் உலகில் நோய் தடுப்புப் பணி குறித்து அடுத்தக்கட்ட ஆலோசனைகளை வழங்க உள்ளனர். இது, சீனாவும் உலக நாடுகளும் மகிழ்ந்து எதிர்பார்க்கும் ஆக்கப்பூர்வ முன்னேற்றமாகும்.

நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் சீனா வெளிப்படையாக நடந்து கொண்டுள்ளதா என்பது குறித்து, அதன் உண்மையான பதில்களில் இருந்து அறியலாம்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்