உலக பொது சுகாதார நெருக்கடி அரசியல் கேலிக்கூத்தாக மாறாது

2020-03-02 19:51:30
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலக அளவில் 60க்கும் அதிகமான நாடுகளில் கொவைட்- 19 பரவியுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமைச் செயலாளர் தெட்ரோஸ் சமீபத்தில் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள இந்த வேண்டுகோள் அறிக்கையில் நாம் இப்போது முடிவெடுக்கும் நேரத்தில் இருக்கின்றோம். இந்த வைரஸை கட்டுப்படுத்தி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுத்து உயிர்களை காக்க வேண்டும். அதற்கு உரிய சன்னலை விரைவாக திறக்க வேண்டும் என்றார்.

இவ்வைரஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பணியில் அனுபவம் பெற்றுள்ள நாடாக விளங்கும் சீனா, உள்நாட்டில் தெளிவான முன்னேற்றம் அடைந்து வரும் அதேவேளை, இயன்றளவில் பிற நாடுகளுக்கு உதவி செய்து வருகிறது. மார்ச் 2ஆம் நாள், சீனாவின் ஷாங்காய், தென்கொரியாவுக்கு நன்கொடையாக அளித்துள்ள 5இலட்சம் முக கவசங்கள் அந்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன. ஜப்பானுக்கு கொவைட்-19 வைரஸ் பரிசோதனை மருந்துப் பெட்டிகளை நன்கொடையாக வழங்கியதைத் தொடர்ந்து, சீன அரசு சமீபத்தில் பாதுகாப்பு ஆடை மற்றும் முக கவசங்கள் போன்ற பொருட்களை நன்கொடையாக அளித்துள்ளது.

உலளவில் நோய் தடுப்புக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் சீனா முனைப்புடன் பங்கேற்றுக் கொள்கிறது. முன்னதாக சீனாவுக்கு உதவி செய்துள்ள அந்த நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்குப் பதிலளிப்பது மட்டுமல்லாமல், சீனா பெரிய நாட்டின் பொறுப்புணர்வை நிறைவேற்றி வருகிறது.

ஆனால், தற்போது நிலவும் இக்கட்டான காலக்கட்டத்தில், மேலை நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர், அரசியல் நலன்களுக்காக தொடர்ச்சியாக வதந்திகளை உருவாக்கி, சீனா மீது அவதூறு பரப்புகின்றனர். உதாரணமாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பெயோ, நோய் தடுப்புக்கு சீனாவின் முயற்சிகளை இடைவிடமால் பழித்து கூறியதோடு, சீனாவின் அரசியல் அமைப்புமுறை மீதும் அவதூறுப் பேசினார்.

இத்தகைய அரசியல்வாதிகள், நோய் தடுப்புக்கான பன்னாட்டு ஒத்துழைப்பைச் சீர்குலைக்கும் சக்தியாக மாறி வருகின்றனர். இதன் விளைவாக, அமெரிக்கர் உள்ளிட்ட முழு மனித சமூகத்தின் நலன்கள் பாதிக்கப்படும்.

உண்மையில், உலக பொது சுகாதார நெருக்கடியைச் சமாளிக்கும் பொழுது, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டுகின்றோம். அதை அரசியல் கேலிக்கூத்தாக மாற்ற வேண்டாம்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்