பொதுச் சமூகத்தை உருவாக்குவதில் சொல்லும் செயலும் ஒன்றாகப் பொருந்திய சீனா

மதியழகன் 2020-03-03 19:11:28
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட்-19 வைரஸு எதிரான போராட்டத்தில் சீனாவின் முயற்சி குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் பேசுகையில் சீனா, உலகிற்கு தடை எல்லையை கடினமாக உருவாக்கியது என்று தெரிவித்தார். கொவைட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதில் தியாகம் செய்து, பெரிய பங்காற்றி வரும் சீன மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தற்போது, இவ்வைரஸ் உலகின் 60க்கு அதிகமான நடுகளுக்குப் பரவியுள்ளது. வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பன்னாடுகள் முனைப்புடன் செயல்படும் அதேவேளை, சீனாவின் நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் ஆழமாக அறிந்து வைத்துள்ளன.

பொது எதிர்கால சமூகம் என்ற கருத்தைக் கடைப்பிடித்து வரும் சீனா, கொவைட்-19 வைரஸைச் சமாளிக்கும்போது, வரலாற்றில் இல்லாத அளவிற்கு விரிவான கண்டிப்பான கட்டுப்பாட்டு நடவடக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஒரு திங்கள் காலத்துக்கும் மேலாக வைரஸ் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. உலகின் ஆயத்தப் பணிக்கு சீனாவின் இந்த முயற்சி காலத்தை வென்று தடையை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பில் மேலிண்டா கேட்ஸ் நிதியத்தின் இணை தலைவர் பில் கேட்ஸ் கூறியதைப் போல, நோயின் உறுதியற்ற தன்மையைச் சமாளிக்கவே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு என கொள்கையை பல்வேறு நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும்.

வைரஸ்க்கு எதிரான சீனாவின் முயற்சி, சீன மக்களின் சுகாதாரத்தை பேணிக்காப்பது மட்டுமல்லாமல், உலகின் நோய் தடுப்புக்கு பெரிய ஆதரவாகவும் அமையும். வைரஸ்க்கு நாட்டின் எல்லை இல்லை. மனிதர்கள் எதிர்கொள்ளும் பொது அறைகூவல்களைச் சமாளிக்கும் போது, சீனா உண்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்