அமெரிக்காவின் “ஊடக சுதந்திரம்” போலித்தனமானது

பூங்கோதை 2020-03-04 11:42:01
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவிலுள்ள 5 சீனச் செய்தி ஊடகங்களைச் சேர்ந்த சீனப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசு உள்ளூர் நேரப்படி மார்ச் 2ஆம் நாள் தெரிவித்தது.

சீனாவின் செயலுக்கு பதில் நடவடிக்கை எடுக்கும் விதம் சமத்துவ முறையில் மேற்கொண்ட நடவடிக்கை இதுவாகும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையிலே, சீனாவிலுள்ள அமெரிக்கச் செய்தி ஊடகப் பணியாளர்களின் எண்ணிக்கையை சீன அரசு ஒருபோதுமே கட்டுப்படுத்தவில்லை. இதுவரை, சீனாவிலுள்ள அமெரிக்கச் செய்தி ஊடகங்களின் எண்ணிக்கை 29 ஆகும். அமெரிக்காவிலுள்ள சீனச் செய்தி ஊடகங்களின் எண்ணிக்கை 9 மட்டும். அமெரிக்கச் செய்தியாளர்கள் நுழைவிசைவு இருந்தால் சீனாவிற்கு பல முறை வந்து செல்ல முடியும். ஆனால், சீனச் செய்தியாளர்கள் ஒவ்வொரு முறை அமெரிக்காவிற்குச் செல்லும்போதும் புதிய நுழைவிசைவு தேவை.

மேலும், கரோனா வைரஸ் சீனாவில் பரவிய பிறகு, அமெரிக்காவின் சில செய்தி ஊடகங்கள் சீனாவின் மீது உள்நோக்கத்துடன் பழி கூறி, சர்வதேச சமூகத்தில் கடும் கோபத்தை எழுப்பியுள்ளன. தனியொரு வெளிநாட்டுச் செய்தி ஊடகத்தின் மீது சீனா நடவடிக்கையை மேற்கொள்வது, சட்டத்துக்கும் விதிக்கும் பொருந்தியது.

அமெரிக்காவிலுள்ள 5 சீன ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வப் பின்னணி உண்டு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கூறப்படும் “ஊடக சுதந்திரம்” என்பது ஒரு போலித்தனமான முகமூடி என்று தெரிய வந்துள்ளது. சீன அரசியல் அமைப்பு முறையைத் தாக்குவதுதான், அமெரிக்காவின் இச்செயலின் சாராம்சமாகும்.

உலகம் பலதுருவமயமாக்கமானது. சீனாவின் வளர்ச்சிப் போக்கை யாராலும் தடுக்க முடியாது. அமெரிக்காவின் இச்செயல், வரலாற்று வளர்ச்சியின் போக்கிற்குப் புறம்பானது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்