சீனாவை மன்னிப்பு கேட்கச் சொல்லும் விவகாரத்தில் எந்த வித ஆதாரமும் இல்லை!

மதியழகன் 2020-03-05 21:27:19
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட்-19 வைரஸ் பரவலை மிக முன்னதாக கண்டறியப்பட்ட நாடாக சீனா விளங்குகிறது. இந்நிலையில், சில மேலை நாட்டு செய்தி ஊடகங்கள், எந்த வித ஆதாரமுமின்றி, கொவைட்-19 வைரஸை சீன வைரஸ் என்று கூறி அவதூறுக் கருத்து பரப்பி வருகிறது.

சமீபத்தில் அமெரிக்காவின் ஃபோக்ஸ் செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர், வைரஸ் உருவான இடம் சீனா தான் என்று கூறி, இதற்காக சீனா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் ஒரு கோள்வி கேட்க வேண்டும். அதாவது, 2009ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து‘எச்1என்1’காய்ச்சல், 214 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவியது. இதனால் உலகளவில் கிட்டத்தட்ட 3லட்சம் உயிரிழப்பு ஏற்பட்டது. அப்போது, அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று யாரும் கூறினார்களா?

மேலும் தற்போது, வைரஸ் உருவான இடம் பற்றிய முடிவு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பிற நாடுகள் போல, சீனாவும் அதன் பாதிப்புக்குள்ளான ஒரு நாடாகும். தற்போது, நோய் உலகலவில் பரவி வருகிறது. இதனிடையில், சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட காரணம் அறியப்படவில்லை.

எனவே கொவைட்-19 சீனாவில் தான் உருவாகியது என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை.

இந்த வைரஸை சீன வைரஸ் என சில செய்தி ஊடகங்கள் கூறியது பொறுப்பற்ற செயலாகும். எனவே, சீனா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவது மிகவும் அபத்தமானது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்