கரோனா வைரஸுக்கு எதிராக போராடி சிக்கல்களை எதிர்கொள்ளும் சீனா?

2020-03-06 19:39:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

“சீனாவின் சக்திமிக்க பிரச்சார இயந்திரத்தைப் பலவீனப்படுத்துகிறது கரோனா” போன்ற தலைப்பிலான கட்டுரைகளை, அமெரிக்காவின் தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய செய்தி ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டுள்ளன.

இந்த கட்டுரைகளைப் படிக்கும் போது, வைரஸுக்கு எதிராக போராடும் சீனா தோல்வியைச் சந்திக்கிறது என்றும் இதன் காரணம், அரசு மேலான்மை மற்றும் செய்தி ஊடகம் தான் என்றும் நினைக்கத் தோன்றும்.

ஆனால், சீனாவின் ஒட்டுமொத்த நிலை, அந்தக் கட்டுரைகளில் இருந்த அம்சங்களுக்குப் புறம்மானது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில், எண்ணிக்கையைப் பாருங்கள். பிப்ரவரி திங்களின் பிற்பாதி தொடங்கி, நல்ல தகவல் அதிகரித்துள்ளது. ஹுபெய் மாநிலத்தை தவிர, சீனாவின் மற்ற பகுதியில், தினமும், புதிதாக பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. சில பகுதிகளில் முற்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் சமூக கொந்தளிப்பு ஏற்படவில்லை. பொது மக்கள் அடிப்படையில் இயல்பான வாழ்க்கைய வாழ்கின்றனர்.

இரண்டாவதாக, அரசு மேலான்மைத் திறனைப் பார்ப்போம். தற்போது, மருத்துவ வசதிகள் மற்றும் படுக்கை வசதிகள் தேவையை நிறைவு செய்ய முடியும். சில தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. பல மாநிலங்கள் மற்றும் மாநகரங்களில், அவசர நிலை தளர்த்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மேற்பார்வைக் குழுவுக்கு தலைமைத் தாங்கிய ப்ரூஸ் ஏல்வார்ட், சீனாவின் வூகான் உள்ளிட்ட நகரங்களுக்கு நேரில் சென்றார். சீனப் பயணம் குறித்து இரண்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு பேசுகையில், சீனாவில் இருந்து, வேகம் மற்றும் நடவடிக்கை ஆகிய இரண்டு அம்ச அனுபவங்களைக் கற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

தற்போது, சமூகத்தில் விமர்சனங்கள் எழுவது இயல்பாக உள்ளது. குறிப்பாக, நோய் பரவி வரும் இக்கட்டான சூழ்நிலையில் இது அரிது இல்லை. ஆனால், சில விமர்சனங்கள் முழுமை நிலையை பிரதிநிதிப்படுத்துவதில்லை.

ஆனால், தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் மற்றும் நியூயார்க் டைம்ஸ் கட்டுரைகளில் தவறான தகவலை வெளியிடுவதோடு, சீனா மீது அவதூறுக் கருத்தையும் பரப்பி வருகின்றது.

சீனாவில் வைரஸ் பரவல் மோசமான நிலையில் உள்ளது என்பது உண்மையாக இருக்குமா?உண்மையாக இருந்தால், “சொத்துக்கள் பாதுகாப்பாக உள்ள நாடுகளின் பட்டியலில் சீனா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை மோர்கன் ஸ்டான்லி முதலீட்டு வங்கி சேர்த்துள்ளது ஏன்?

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்