சீனாவின் வைரஸ் பரவல் தடுப்புக்கு வலுவான ஆதரவை அளிக்கும் அறிவியல் தொழில் நுட்பங்கள்

வான்மதி 2020-03-07 17:55:50
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, இவ்வைரஸுக்கு எதிரான பல அறிவியல் ஆய்வுகள் சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு பாடங்களையும் துறைகளையும் கடந்த சீன அறிவியல் ஆராய்ச்சிக் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட்டு வருகின்றன. மருத்துவச் சிகிச்சை மற்றும் மருந்து, தடுப்பூசி ஆய்வு மற்றும் தயாரிப்பு, பரிசோதனை நுட்பம் மற்றும் பொருட்கள், நோய் காரணவியல் மற்றும் கொள்ளை நோயியல், விலங்கு மாதிரிக் கட்டமைப்பு ஆகிய 5 துறைகளில் சுமார் ஒரு திங்கள்காலத்தில் ஆக்கப்பூர்வ முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு அறிவியல் தொழில் நுட்பம் வலுவான ஆதாரத்தை வழங்கியுள்ளது. சில தடுப்பூசிகள் வரும் ஏப்ரல் திங்களில் மருத்துவ ஆய்வு மற்றும் அவசரப் பயன்பாட்டுக்கு வர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அறிவியலாளர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் உயர்நிலை கணக்கீட்டின் மூலம் வைரஸ் பரவிய ஒரு திங்களுக்குள் வைரஸின் டிஎன்ஏ வரிசையை உறுதிப்படுத்தி உரிய நேரத்தில் உலகிற்கு வெளியிட்டது. இந்த ஆய்வு சாதனையின் பகிர்வு, புதிய மருந்து மற்றும் தடுப்பூசியின் ஆராய்ச்சியைத் தூண்டியுள்ளது.

ஹோ ஷென் ஷான் மற்றும் செய் ஷென் ஷான் மருத்துவ மனைகளின் கட்டுமானத்தில் சீனாவின் பெய்தொவ் செயற்கைக் கோள் புவியிடங்காட்டி முறைமை, அளவீட்டுப் பணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

வசந்த விழா விடுமுறையில், சீனாவின் தொடர்புடைய வாரியங்கள் முன்னேறிய குடிமக்கள் அடையாள முறைமையைப் பயன்படுத்தி, வைரஸ் பாதிப்பு முதலில் தோன்றிய இடங்களில் இருந்த மக்கள் சென்ற இடங்களைக் கண்டறிந்து, பயனுள்ள முறையில் வைரஸின் பரவலைத் தடுத்துள்ளன.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பின் பெய்ஜிங்கில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிப் பணியைப் பார்வையிட்ட போது கூறியதைப் போல், அமைப்பு முறை சார் மேம்பாட்டை முற்றிலும் வெளிக்கொணர்ந்து, வலிமைமிக்க அறிவியல் தொழில் நுட்பங்களைச் சீராகப் பயன்படுத்தினால், வைரஸ் பாதிப்புக்கு எதிராக முன்கண்டிராத சோதனையில் வெற்றி பெறுவது உறுதி.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்