அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் பற்றிய உணமையான நிலைமை

பூங்கோதை 2020-03-07 18:32:15
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 6ஆம் நாள் 23 மணி வரை, கரோனா வைரஸ் அந்நாட்டின் 27 மாநிலங்களைச் சேர்ந்த 61 நகரங்களில் பரவியுள்ளது. 330 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேர் உயிரிழந்தனர். ஆனால், அமெரிக்காவின் நோய் கட்டுபாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் இணையதளம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அந்நாட்டில் மொத்தம் 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்தனர். இது, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்ளை விட 166 குறைவு!

கரோனா வைரஸ் பரவலை எதிர்நோக்கும் போது, அமெரிக்காவின் நோய் கட்டுபாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் திறமை விருப்பத்திற்கு இணங்க இருக்காது. உண்மையிலே, அமெரிக்காவில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

முதலாவதாக, நியூக்ளிக் அமில சோதனையின் செயல்திறன் குறைவு. கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகத்துக்குரிய நபர் காலதாமதமின்றி உறுதிப்படுத்தப்பட முடியாது.

இரண்டாவதாக, கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் மிக முக்கிய காலக் கட்டத்தை அமெரிக்க அரசு தவறவிட்டு விட்டது. தவிர, எதிர்மறையான தகவல்களை அமெரிக்க அரசு மூடி மறைக்க முயற்சித்துள்ளது.

மூன்றாவதாக, அமெரிக்க மக்களுக்கு மருத்துவப் பாதுகாப்புப் பொருட்கள் மிகவும் குறைவு. பணம் இல்லாதிருந்தால், நியூக்ளிக் அமில சோதனையை மேற்கொள்ள முடியாது என்று பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நான்காவதாக, அரசியல்வாதிகள் பொதுத் தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். கரோனா வைரஸ் பரவலின் இடர்ப்பாட்டைக் குறைப்பதைக் கருத்தில் கொள்ளவில்லை.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்