சீன அரசுத் தலைவரின் தலைமையிலுள்ள கரோனா வைரஸ் தடுப்புப் பணி

பூங்கோதை 2020-03-07 20:11:12
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தற்போது, கரோனா வைரஸ் உலகளவில் பரவி வருகிறது. சீனாவில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருகிறது. சீனப் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வு படிப்படியாக இயல்பான நிலைக்குத் திரும்பி வருகிறது.

கரோனா வைரஸ் பரவிய கடந்த ஒரு திங்களாக, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு நேரடியாகத் தலைமை தாங்கி வருகிறார். அவரது தலைமையில், கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான முக்கிய கூட்டங்கள் பலமுறை நடத்தப்பட்டன. மேலும், கீழ் நிலையிலான தடுப்புப்பணி மற்றும் அறிவியல் ஆய்வுக்கான முக்கிய இடங்களுக்கு அவர் பலமுறை சென்று ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான அனைத்து முக்கிய நுணுக்கங்கள் குறித்தும், ஷி ச்சின்பிங் சரியாகக் கட்டளையிட்டு வந்துள்ளார். இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பில் சீனா குறுகிய காலத்தில் அதிக சாதனைகளைப் பெற்றுள்ளது. ஷி ச்சின்பிங்கின் கருத்து மற்றும் கட்டளை, நாட்டின் நிர்வாக அமைப்புமுறை மற்றும் நிர்வாகத் திறனின் நவீனமயமாக்கத்தின் நடைமுறைக்கு பாடமாக விளங்கியுள்ளன.

தற்போது, வூ ஹான் நகரில் செர்ரி மலர்கள் மலரத் தொடங்கியுள்ளன. இதைப் போல், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் தலைமையில், சீனாவில் வைரஸ் தடுப்புப்பணியும், வசந்தம் போன்ற நம்பிக்கைக் காலத்தில் அடி எடுத்து வைத்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்