சீன மனித உரிமை துறையின் வளர்ச்சி

வான்மதி 2020-03-08 19:32:02
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரஸ் பரவிய பிறகு, ஹுபெய் மாநிலத்தில் நோய் பரவல் தடுப்பு முன்னணியில் லட்சக்கணக்கான பெண் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீனாவின் பல்வேறு இடங்களிலிருந்து ஹுபெய்க்கு உதவியளிக்கும் விதம் அங்கு சென்ற மருத்துவப் பணியாளர்களில் 60 விழுக்காட்டுக்கு மேலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, சர்வதேச மகளிர் சங்கத்தின் தலைவர் நிலா பாய்யாஸ் கூறுகையில், சீனாவின் பெண் மருத்துவர்களும் செவிலியர்களும் ஈடிணையற்ற பணியை மேற்கொண்டு வருகின்றனர். சொந்த பாதுகாப்பைக் கூடக் கருதாமல் நோயாளிகளுக்கு தயமக்கமின்றி உதவியளித்து, வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அவர்களின் பங்களிப்பு வரலாற்றில் பதிவு செய்யப்படும் என்று பாராட்டு தெரிவித்தார்.

சீனாவில் ஆணும் பெணும் சமம் என்பது அடிப்படைக் கொள்கையாகும். இவ்வாண்டு மகளிர் தினத்தை ஒட்டி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீன மகளிருக்கு வாழ்த்து மற்றும் பாராட்டுகளைத் தெரிவிப்பது, சீன ஆளும் கட்சி மற்றும் அரசு எப்போதுமே பெண்களுக்கு அன்பு மற்றும் மதிப்பு அளிப்பதை வெளிக்காட்டியுள்ளது.

நவ சீனா நிறுவப்பட்ட 70 ஆண்டுகளாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் பலர் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளனர். பெண்களின் தகுநிலை உயர்வு, அவர்களின் உரிமைகளை உத்தரவாதம் செய்தல் ஆகியவற்றுடன், சீன சமூகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைத் தூண்டும் முக்கிய ஆற்றலாக அவர்கள் மாறியுள்ளனர். சீனாவின் மனித உரிமை துறையின் முன்னேற்றத்தையும் இது வெளிப்படுத்தியுள்ளது.

சொந்த மகளிர் லட்சியத்தின் வளர்ச்சியைத் தவிர, சீனா நடைமுறைக்கு ஏற்ற செயல்களின் மூலம் உலக மகளிர் துறையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தையும் தூண்டி வருகிறது. சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, வளரும் நாடுகளைச் சேர்ந்த பெண்களின் தகுநிலை மேம்பாட்டுக்கு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மகளிருக்கு விடுதலை மற்றும் முன்னேற்றம் இல்லை என்றால், மனிதகுலத்துக்கு விடுதலை மற்றும் முன்னேற்றம் இல்லை என்பது வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். இதற்காக சர்வதேச சமூகம் கூட்டு முயற்சியுடன் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்