கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் அமெரிக்காவின் குறைபாடுகள்

பூங்கோதை 2020-03-10 21:06:46
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோனா வைரஸ் பரவியது முதல் தற்போதுவரை, இவ்வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் சீனா மற்றும் அமெரிக்காவின் வெவ்வேறான செயல்கள் தெளிவாக காணப்படுவதை அறிய முடிகிறது.

கடினமான முயற்சியுடன், சீனா, ஒரு திங்களுக்கும் மேலான காலத்துக்குள் கரோனா வைரஸ் பரவலைப் பெரிதும் கட்டுப்படுத்தியுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 9ஆம் நாள், வூ ஹான் நகரில் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முதன்முறையாக 20க்குள் குறைந்துள்ளது. ஹுபெய் மாநிலத்தைத் தவிர, பிற மாநிலங்களில் தொடர்ச்சியாக 3 நாட்களாக உள்ளூரில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எவரும் இல்லை. உலகச் சுகாதார அமைப்பு 9ஆம் நாள் வெளியிட்ட தகவலைப் போல், சீனாவில் கரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வருகிறது.

அதேவேளை, அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உள்ளூர் நேரப்படி மார்ச் 9ஆம் நாள் இரவு 7 மணி வரை, அமெரிக்காவில் 30க்கும் மேலான மாநிலங்களில் புதிதாகப் பாதிக்கப்பட்டோர் தோன்றினர். 10 மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குறைந்தது 704 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 26 பேர் உயிரிழந்தனர்.

கரோனா வைரஸ் பரவலைச் சமாளித்து வரும் இச்சூழலில், அமெரிக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. ஆசிய-பசிபிக் விவகாரத்துக்கான அமெரிக்காவின் முன்னாள் துணை வெளியுறவு அமைச்சர் கர்ட் காம்ப்பெல் அண்மையில் கூறுகையில், சீனா கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோது, அமெரிக்காவுக்கு போதிய கால அவகாசம் இருந்தது. ஆனால், அமெரிக்கா இந்நேரத்தைப் பயன்தரும் முறையில் பயன்படுத்தவில்லை என்றார்.

இதைத் தவிர, கரோனா வைரஸ் பரவல் பற்றிய புள்ளிவிவரங்கள், மருத்துவப் பொருட்களின் உத்தரவாதம், அவசர பொருட்களின் விநியோகம் உள்ளிட்டவற்றில், அமெரிக்காவின் குறைபாடுகளைக் காண முடிகிறது. ஆனால், அந்நாட்டின் அரசியல்வாதிகள் சிலர், இப்பிரச்சினைகளைக் கண்டும் காணாமலும் நடந்து வருகின்றனர்.

பல்வேறு நாடுகளின் அமைப்புமுறைகள் வேறுபட்டவை என்ற போதிலும், மக்களின் உயிர் பாதுகாப்பு எப்போதுமே மிக முக்கியமானது. கரோனா வைரஸ் பரவலை அரசியல் மயமாக்குவது, மக்களின் உயிர்களைப் பொருட்படுத்தாத செயலாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்