கரோனாவை எதிர்த்துப் போராட முன்னணியில் நின்று பணிகளைச் செய்து வரும் சீனத் தலைவர்!

மதியழகன் 2020-03-11 15:40:27
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் செவ்வாய்கிழமை வூஹானுக்குச் சென்று, கரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் பணிகளுக்கான ஏற்பாடுகளை தாமே முன்னணியில் நின்று செய்தார்.

முன்பு பெய்ஜிங்கில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளை களஆய்வு செய்த ஷிச்சின்பிங், தற்போது வூஹானில் நேரடியாக மேற்பார்வை செய்தது குறிப்பிடத்தக்கது. கரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் மையத்தில் அவர் பயணம் மேற்கொண்டு திசை காட்டியாக செயல்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

சீன அரசுத் தலைவரின் தலைமையில், வரலாறு காணாத ஒத்துழைப்புடன் “மக்கள் ஒன்றாக ஓரணியில் நின்று கரோனா வைரஸூக்கு எதிராக நடத்திய போராட்டம் தற்போது வெற்றி அடைய தொடங்கியது. சீனாவில் கரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வந்துக் கொண்டிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஷிச்சின்பிங் வூஹான் வந்தடைந்த இதே நாளில், கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக அமைக்கப்பட்ட 14 தற்காலிக மருத்துவமனைகளும் மூடப்பட்டன. இந்த தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டது, வூஹானில் கரோனாவை தடுத்து நிறுத்தும் பணி உண்ணையான முன்னேற்றம் அடைவதைக் காட்டுகிறது.

உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் கடுமையான நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கையினால் 2 மாதங்களுக்குள் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. சீனாவின் அதியுயர் தலைவர் மக்களுடன் இணைந்து போராடி வருவதன் விளைவு இது தான் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸ் பேசுகையில், பெய்ஜிங்கில் பயணம் செய்தபோது, சீன அரசுத் தலைவர் நேரடியாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளுக்கு தலைமையேற்று இருப்பதை நேரில் கண்டேன் என்று தெரிவித்தார். கரோனாவைத் தடுத்து நிறுத்த தலைமைத் திறன் மற்றும் அரசியல் செல்வாக்கு இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எப்போதும் வேண்டுகோள் விடுத்து வருகிறது. சீனத் தலைவர், இத்தகைய சூழலில் தனது தலைமைத் திறன் மற்றும் அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் தெட்ரோஸ் கூறினார்.

சீனாவில் கரோனாவுக்கு எதிரான போராட்டம் தற்போது சாதனை பெறும் முக்கிய கட்டத்தில் உள்ளது. ஷிச்சின்பிங் வூஹானுக்கு நேரில் சென்று உத்தரவுகளைப் பிறப்பித்ததன் மூலம், சீனாவின் நம்பிக்கை, மனவுறுதி மற்றும் திறமையை உலகிற்கு வெளிக்காட்டியிருப்பதோடு, இந்த நெருக்கடியைச் சமாளித்து வெற்றி பெறுவதையும் இது உறுதி செய்துள்ளது

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்