உலகளாவிய கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சீனாவின் பங்கு

பூங்கோதை 2020-03-12 20:10:30
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உள்ளூர் நேரப்படி மார்ச் 11ஆம் நாளிரவு 6 மணி வரை, இத்தாலியில் கரோனா வைரஸால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 12462. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827. அண்மையில், இத்தாலி வெளியுறவு அமைச்சர் லூய்கி டி மாயோ சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயுடன் தொடர்பு கொண்ட போது, இத்தாலியில் மருத்துவப் பொருட்கள் மற்றும் சாதனங்கள் பற்றாக்குறை நிலவுகிறது. சீனா இத்தாலிக்கு உதவ வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

மிக அபாயகரமான தருணத்தில், முகக் கவசம் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை சீனா இத்தாலிக்கு வழங்கி, மேலதிக தேவையான பொருட்கள் மற்றும் சாதனங்களை இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யும். அதேவேளையில், சீன செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த 7 நிபுணர்கள் அடங்கிய உதவிக் குழு 11ஆம் நாள், தொடர்புடைய உதவிப் பொருட்களை, இத்தாலிக்குக் கொண்டு சென்றது.

உண்மையிலே, இத்தாலிக்கு உதவியளிப்பது மட்டுமல்லாமல், உலகளாவிய கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் போராட்டத்தில், சீனா மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன், சொந்த நாட்டின் நலன்களைப் பலி கொடுத்தும் உள்ளது.

கடந்த ஒரு திங்களாக, சீனா கடினமான முயற்சிகளுடன், கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் பெரும் முன்னேற்றத்தைப் பெற்று, பல்வேறு தரப்புகளுக்கு மதிப்புமிக்க காலத்தை வழங்கியுள்ளது. அத்துடன், சீனா வெளிப்படையான கோட்பாடுடன், பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் தொடர்புடைய தகவல்களைப் பகிர்ந்து கொண்டது. இதுவரை, ஐரோப்பிய ஒன்றியம், ஆசியான் நாடுகள், ஆப்பிரிக்க ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் காணொளி கூட்டம் நடத்தி, கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான திட்டங்களைப் பகிர்ந்து கொண்டது. மேலும், உலகச் சுகாதார அமைப்புக்குச் சீனா உதவி தொகையை அளித்ததுடன், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருத்துவப் பொருட்களை வழங்கி, நிபுணர் குழுக்களையும் அனுப்பியுள்ளது. தவிர, மருந்து, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீனா தொடர்புடைய நாடுகளுடன் ஒத்துழைத்து வருகிறது.

சீனாவின் செயல், சர்வதேசச் சமூகத்துக்கு பிரதிபலனாக இருப்பது மட்டுமல்லாமல், உலகப் பொது சுகாதாரப் பாதுகாப்புக்கும் பொறுபேற்கும் விதம் அமைந்துள்ளது. மேலும், சீன அரசுத் தலைவர் கடைப்பிடிக்கும் வருகின்ற மனிதக் குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகம் என்ற கருத்தைச் சீனா நடைமுறை நடவடிக்கையின் மூலம் செயல்படுத்தி வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்