உலகளாவிய தொற்று நோய் தடுப்பில் பாரம்பரிய சீன மருத்துவத்தின் பங்கு

வான்மதி 2020-03-19 15:41:29
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மார்ச் 11ஆம் நாள், பெய்ஜிங், ட்செங்சோ, ஹாங்காங், இத்தாலியின் ரோம், கனடாவின் டொரன்டொ, சிங்கப்பூர் ஆகிய 6 இடங்களில் பாரம்பரிய சீன மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் சிலர் முதன்முறையாக காணொளி கூட்டம் நடத்தினர். அப்போது சீனாவின் பழமை வாய்ந்த பாரம்பரிய மருந்து கடை தோங்ரென்தாங்கின் நிபுணர்கள் புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பில் பெற்றுள்ள வெற்றிகரமான அனுபவங்களின் அடிப்படையில் மருந்து குறிப்புகளை வழங்கினர்.

மார்ச் 13ஆம் நாள் வரை ஹுபெய் மாநிலத்தில் வைரஸ் தடுப்புக்கான சிகிச்சையில் பாரம்பரிய மருந்துகளின் பயன்பாட்டு விகிதம், 91 விழுக்காடு. தற்காலிக மருத்துவமனைகளில் இவ்விகிதம் 99 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. சீனப் பாரம்பரிய மருத்துவம் மேலை மருத்துவத்துடன் இணைந்து பயன்படுத்தப்பட்டால், நோய் அறிகுறிகள் விரைவில் குறைக்கப்படும். குணமடையும் விகிதத்தை அதிகரிக்கவும் உயிரிழப்பைக் குறைக்கவும் இது துணைபுரியும் என்பதை ஆய்வு முடிவுகள் நிரூபித்துள்ளது.

தற்போது பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் மருந்துகள் 183 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவல் செய்யப்பட்டுள்ளன. உலகத்துடன் சேர்ந்து தொற்று நோய் பரவல் தடுக்கும் சவாலில், பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் மருந்துகளின் தனிச்சிறப்புமிக்க மேம்பாடுகள் மற்றும் பயன்கள் பரந்தளவில் அறிந்து கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

சீன பாரம்பரிய மருத்துவம் மற்றும் மேலை மருத்துவத்தின் ஞான வடிவமாக கோவிட் -19 நோய்க்கான சிகிச்சை முறை விளங்குகிறது. உலகளாவிய தொற்று நோய் தடுப்பில், மேலதிக நாடுகள் பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் மருந்துகளை அறிந்து கொண்டுப் பயன்படுத்தும் வகையில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ள சீனா விரும்புகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்