கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் உலகிற்கு உதவும் சீனா

பூங்கோதை 2020-03-23 12:01:22
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தற்போது, புதிய ரக கரோனா வைரஸ் உலகின் பல்வேறு இடங்களில் பரவி வருகிறது. சீனாவில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் ஈடுப்பட்ட மருத்துவர்களில் சிலர், வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள மருத்துவர்களுக்கு நேரடியாக உதவியளித்து வருகின்றனர். சிலர் இணையத்தின் மூலம், வெளிநாடுகளுடன் அனுப்பவங்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவர்களை உலகின் பல்வேறு துறையினர்கள் பாராட்டி வருகின்றனர்.

மார்ச் 19ஆம் நாள், கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சர்வதேசப் பரிமாற்றக்கூட்டத்தில், ஸொங் நான்ஷான் உள்ளிட்ட பல புகழ்பெற்ற சீன நிபுணர்கள், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களுடன் சீனாவின் அனுப்பவங்களையும், வழிமுறைகளையும் ஆழமாகப் பகிர்ந்து கொண்டனர்.

மேலும், 4 முறையாக நடைபெற்ற கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சீன-ஐரோப்பிய காணொளிக் கூட்டத்தின் மூலம், ஐரோப்பாவின் அனைத்து நாடுகளுடன் தொடர்புடைய வழிமுறைகள் மற்றும் தகவல்களை சீனா பகிர்ந்து கொண்டுள்ளது.

இதுவரை, சீன நிபுணர்கள், செர்பியா, ஈரான், ஈராக், இத்தாலி ஆகிய நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.

உலகளவில் அரசியல் தலைவர்களும், பொது மக்களும் சீனாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சீனாவின் அனுப்பவங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று செக், கோஸ்டாரிகா, கசகஸ்தான் உள்ளிட்ட நாட்டுத் தலைவர்கள் அண்மையில் தெரிவித்தனர். பொது மக்கள் சமூக ஊடகங்களில், சீன மருத்துவர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புள்ளிவிவரங்களின்படி, இதுவரை 82 நாடுகளுக்கும், உலகச் சுகாதார அமைப்பு மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கும் உதவியளிக்க உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனா, நடைமுறை நடவடிக்கைகளின் மூலம், மனிதக் குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்துக்குப் பொறுப்பேற்று வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்