கொவைட்-19 நோயை எதிர்த்து போராடும் சர்வதேச ஒத்துழைப்புச் சூழலைச் சீர்குலைக்கும் அமெரிக்காவின் செயல்

மதியழகன் 2020-03-28 16:08:15
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுத் தலைவர் மார்ச் 26ஆம் நாளன்று “2019ஆம் ஆண்டு தைபெய் மசோதாவை”சட்டமாக்க கையெழுத்திட்டார். இதன் மூலம் பிற நாடுகள் சீனாவுடன் தூதாண்மை உறவை உருவாக்குவதற்கு அமெரிக்கா தடை விதித்து, தைவானுக்கு சர்வதேச ரீதியிலான இடங்களை விரிவாக்க முயல்கிறது. அது, சீனாவின் உள்விவகாரங்களில் நேரடியாக தலையிடுவதாகும்.

இந்த மசோதா, ஒரே சீனா என்ற கொள்கையையும், சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளிலுள்ள விதிகளையும் கடுமையாக மீறியுள்ளது. அது, தைவான் சுதந்திரத்திற்கு கொடிபிடிக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கு தவறான அறிகுறியை காட்டுவதோடு, தற்போது கொவைட்-19 நோயை எதிர்த்து போராடுவதற்கான சர்வதேச ஒத்துழைப்புக்கு கடும் சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

உலகளவில் 180க்கும் அதிகமான நாடுகள், சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவியுள்ளன. ஆனால், தைவான் பிரச்சினையைப் பயன்படுத்தி கொவைட்-19 நோயை தடுக்கும் பன்னாட்டு ஒத்துழைப்பு நிலையைச் சீர்குலைக்க அமெரிக்கா மீண்டும் முயல்கிறது. அமெரிக்காவின் இச்செயல், நோய் தடுப்புக்காக சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுபடச் செயல்படுவதற்கு தடை ஏற்படுத்தும். இது, அமெரிக்க மக்களின் உயிர் மற்றும் உடல்நலத்திற்கு பொறுப்பற்ற செயல் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

தைவான் விவகாரம், சீனாவின் நலனுடன் தொடர்புடையது. ஒரே சீனா என்பது சீன-அமெரிக்க உறவின் அரசியல் அடிப்படையாகும். இது, பன்னாட்டு சமூகத்தில் அறியப்படும் பொது கருத்து ஆகும். அமெரிக்கா மீண்டும் மீண்டும், தைவான் தொடர்பான மசோதாவைப் பயன்படுத்துவது, சீன-அமெரிக்க உறவில் மேலதிக சிக்கல்களைக் கொண்டு வரும். இறுதியாக, அது அமெரிக்காவின் நலன்களைப் பாதிக்கும். அமெரிக்கா வெகுவிரைவில் தனது தவறுகளைச் சரிப்படுத்தி, பிற நாடுகள் சீனாவுடன் உறவை வளர்ப்பதை தடை செய்யாமல் இருக்க வேண்டும். மாறாக செயல்பட்டால், சீனா உறுதியாக பதிலடி கொடுக்கும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்